சேரன்மாதேவி தாலுகாவில் நடந்த “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”
சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு
மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தை
செயல்படுத்தும் பொருட்டு இராதாபுரம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி
மற்றும் மானூர் தாலுகாவில் இம்முகாம் நடந்தது. இந்நிலையில் நேற்று
இத்திட்ட முகாம் சேரன்மாதேவி தாலுகாவில் நடந்தது. முகாமில்,
கோவிந்தபேரி, திருவிருத்தான்புள்ளி பகுதிகளில் நடந்து வரும் குடிநீர்
திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரடியாக சென்று
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கரிசல்பட்டி அரசு ஆரம்பர
சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும்
நோயாளிகளிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து பட்டங்காடு
பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம்,
வீரவநல்லூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் சப்-ரிஜிஸ்டர் ஆபிஸ்
கட்டிடம், அத்தாளநல்லூர் அங்கன்வாடி மையம், திருப்புடைமருதூர்
முருங்கை நாற்று பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு
மேற்கொண்டார்.
பின்னர் மாலை சேரன்மாதேவி தாலுகா
அலுவலகத்தில் நடந்த அனைத்துத் துறை அரசு அலுவலர்களின்
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார். இதில் மாவட்ட எஸ்.பி
சிலம்பரசன், சேரன்மாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின், மாவட்ட
வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட
இயக்குநர் சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் இலக்குவன், தாசில்தார்
வின்சென்ட், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ராஜசேகர், உதவி
கோட்டப் பொறியாளர் ராஜேஸ்வரி, நிர்வாக பொறியாளர் கனகராஜ்,
உதவி நிர்வாக பொறியாளர்கள் ராமசாமி, பாக்கியராஜ், சங்கர், வட்டார
வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்பட பல்வேறு அரசுத் துறை
அதிகாரிகள் கலந்துகொண்டனர்.






