பாலக்காடு பகவதியம்மன் கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்துநடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸ்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சொந்தமாக ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் உருவாக்கி உள்ளார். இவரது கார் பந்தய நிறுவனத்தையும் உருவாக்கி உள்ளார். இவரது கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடந்தபந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இதற்கிடையே, அஜித்குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.இந்தப் படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.புதிய படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலாடை அணியாத நிலையில் அஜித் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டுள்ள போட்டோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த டாட்டூ அஜித்தின் குலதெய்வமான பகவதியம்மன் என தகவல்கள் கூறுகின்றன.






