திருநெல்வேலி 20.8.2024,மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் தமிழ்நாடு அரசு குடும்ப நலத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில், குடும்ப நலத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டும் வகையில் பாராட்டு சான்றுகளும் விருதுகளும் வழங்கப்பட்டது.
சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாந்தி சுசீந்திரனுக்கு மாவட்ட ஆட்சியர் திரு டாக்டர் கார்த்திகேயன் பாராட்டு சான்று வழங்கி விருது வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட மருத்துவக் கல்லூரி டீன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர், மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குநர், , மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர், மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாந்தி சுசீந்திரனுக்கு மாவட்ட ஆட்சியர் திரு டாக்டர் கார்த்திகேயன் பாராட்டு சான்று வழங்கி விருது வழங்கினார்.






