சென்னை:“தமிழகத்தில் புதிய ரயில்வே வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்,”என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழகமுதல்வர்மு.க.ஸ்டாலின்,ரயில்வே அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவுக்கு இன்று(ஆக.19) எழுதியுள்ள கடிதத்தில், “2024 2025 நிதியாண்டில் வழக்கமான ரயில்வே பட்ஜெட்டில்,தெற்குரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்திருப்பதால்,அதன் விளைவாக தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் புதிய வழித்தடங்கள்,இரட்டைப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்குப் போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திடவேண்டும்.
20242025 நிதியாண்டுக்கான இந்திய ரயில்வேக்கான வழக்கமான பட்ஜெட்டில், சிலகணக்குத் தலைப்புகளின்கீழ் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும் போது இதுமிகக்குறைவு.கணக்குத்தலைப்பு 11 புதியபாதைகள் என்பதன் கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 976.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.கணக்குத்தலைப்பு 15இரட்டைப்பாதையாக்கல் என்பதன் கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டில், புதிய வழித்தடத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.674.8 கோடி அளவுக்கு அதிரடிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதால்,தமிழகத்தில் நடைபெற்று வரும் பல முக்கியத்திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும். அந்தவகையில், திண்டி வனம் சஞ் சி திருவண்ணாமலை, திண்டிவனம் நகரி,அத்திபபட்டு புத்தூர்,ஈரோடு பழனி, சென்னை கடலூர்-மகாபலிபுரம், மதுரை-தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) ,ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இருங்காட்டுக் கோட்டை- ஆவடி ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு முக்கியதிட்டங்கள் பாதிக்கப்படும்.அதேபோல்,இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை285.64 கோடி ரூபாய் அளவுக்குக் குறைத்திருப்பது,தமிழகத்தில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும்.
அந்த வகையில்,விழுப்புரம் திண்டுக்கல்,திருவள்ளூர்-அரக்கோணம் (4-வது லேன்), ஓமலூர்-மேட்டூர் அணை, திருவனந்தபுரம் கன்னியாகுமரி,மதுரை- மணியாச்சி தூத்துக்குடி, மணியாச்சி நாகர்கோவில், சேலம் மேக்னசைட் சந்திப்பு ஓமலூர்,காட்பாடி விழுப்புரம்,சேலம் கரூர்-திண்டுக்கல்,ஈரோடு கரூர், சென்னைகடற்கரை-சென்னைஎழும்பூர், அரக்கோணம் யார்டுசாலை 1 மற்றும் 2-க்கு, 3வது மற்றும் 4 வது வழித்தடம் இணைப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும்.மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகள் தொடர்பாக தெற்கு ரயில்வேயில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்கவிரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர்,குறிப்பாக,கிளாம்பாக்கம் பேருந்துநிலையம்,மின்சாரப்பேருந்து சேவைகள்,பெருந்திரள் துரித ரயில் போக்குவரத்துத்திட்டத்தை மாநில அரசிடம்ஒப்படைப்பது போன்றபணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்தப்பட வேண்டும்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும்.நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும் இது தொடர்பாக ரயில்வே அமைச்சர்தனிப்பட்ட முறையில் தலையிடவேண்டும்.” என்று முதல்வர் அந்த கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.






