எனது கடைசி படம் ‘ஜனநாயகன்’ வெளிவராமல் தடுக்கிறார்கள் ‘தடுப்பது யார்’ என்று குறிப்பிடாமல் விஜய் பேச்சு

திருச்சி, ஏப்.3-பெரம்பூருடன் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் நேற்றுதிருச்சி மண்டல அலுவலகம் 2-ல் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேசபாண்டியனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல்  செய்தார்.
அப்போது அவருடன் பொதுச் செயலாளர் என் . ஆனந்த் ,நிர்மல்குமார் ஆகியோர் உடன் இருந்தனர் .விஜய்க்கு மாற்று வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி மனுதாக்கல் செய்தார்.மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த விஜய், பிரசாரவேனில் ஏறி மரக்கடை எம்.ஜி.ஆர்.சிலை பகுதிக்கு சென்றார். அங்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை
அணிவித்து வணங்கினார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அவர்பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள். எல்லோரும்
காலையில் சாப்பிட்டீர்களா? ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?பிரசாரத்தை சீக்கிரம் முடித்து விடுகிறேன். கியாஸ் பிரச்சினை எப்படி இருக்கிறது? சரியாயிடுச்சா? கியாஸ் முன் பதிவு
செய்ய முடிகிறதா?கியாஸ் பிரச்சி னையால் எவ்வளவு டீக்கடைகள் ஓட்டல்களை மூடி விட்டார்கள்.எவ்வளவோ கஷ்டம், நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. கொஞ்சம் உஷாராக இருந்தால் கியாஸ் தட்டுப்பாடு இல்லாமல் தடுத்து இருக்கலாம். இவர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து
இருந்தால் நமது ஊரிலாவது தட்டுப் பாட்டை தடுத்து இருக்கலாம்.இவர்கள் 2 பேரும் தான்
இதற்கு காரணம் . ஆனால் ஸ்டாலின் சார் நமக்கும், அதுக்கும் சம்பந்தம் இல்லை என்பார். அவர்
வீட்டில் ரெய்டு என்றாலோ, பிரச்சினை என்றாலோ டெல்லிக்கு பறந்து சென்று விடுவார். கியாஸ்
சிலிண்டர் பிரச்சினைக்காக டெல்லிக்கு பறந்து போய் வரலாம் அல்லவா?நாங்கள் எப்போதுமே
பொய் வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம் .ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை கட்டணம் இல்லாமல் அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் மூலம் தருவோம் .திருமணமாக உள்ள பெண்க ளுக்கு 1 பவுன் தங்கம் , பட்டுச்சேலை தருவோம் . 6 0 வயது வரை உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 2ஆயிரம் கொடுப்போம்.தமிழகத்தில் பெண்கள்ஒரு மூலையில் இருந்து எந்த மூலைக்கும் பஸ்சில் ஏறி இலவசமாக பயணம் செய்யலாம்.நாங்கள் 100 சதவீதம் நியாயமானஆட்சியை கொடுப்போம்  .விஜய்யை 100 சதவீதம் நம்பலாம்.நீங்க நம்புறீங்க. எனவே எனக்குவாய் ப் பு கொடுங்கள் என்று உங்களி டம் கேட்க எனக்கு உரிமை இருக்கிறது. எனக்கு ஒரேஒரு வாய்ப்பு கொடுங்கள்.எனது கடைசி படம்‘ஜனநாயகன் ’ வெளிவராமல் தடுக்கிறார்கள் . இந்த விஜய்
உங்களுக்காகவும் நீதி கேட்டு வந்திருக்கிறேன், எனக்கா கவும் நீதிகேட்டு வந்திருக்கிறேன். தி.மு.க.கூட்டணி யையும் நம்பாதீர்கள்,பா.ஜ.க. கூட்டணியையும் நம்பாதீர்கள். பாதி கதர் கூட்டணி,பாதி காவி கூட்டணி.இவ்வாறு விஜய் பேசினார்