திண்டுக்கல். ஆக.11 திண்டுக்கல் மாவட்ட அளவிலான பள்ளிகளிகிடையேயான
கால்பந்து போட்டியில் மரியன்னை பள்ளி முதலிடம் பிடித்தது. கால்பந்து கழகம்,
திண்டுக்கல் மேற்கு ரோட்டரிசங்கம் , குயின்சிட்டிரோட்டரி சங்கம் இணைந்து
நடத்திய மாவட்டகால்பந்து போட்டிகள் திண்டுக்கல் மரியன்னை மேல்நிலைப்
பள்ளி, மாரியம்மன்கோயில் பின்புறமுள்ள எஸ்.டி.ஏ.டி., மைதானங்களில் நடந்தது.
கால்பந்துபந்து கழக தலைவர் சுந்தராஜன் தலைமையில் இப்போட்டிகள் நடந்தது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, தலை மையாசிரியர் சிவா,மேற்கு ரோட்டரி
சங்கதலைவர் புருசோத்தமன்,குயின்சிட்ட ரோட்டரிதலைவர் கவிதா செந்தில்
குமார் துவக்கி வைத்தனர்.கால்பந்து கழக செயலர் சண்முகம் வரவேற்றார்.
நேற்று நடந்த இறுதிபோட்டிகளில் ஆண்கள்பிரிவில் முதலிடம் பெற்ற
புனித மரியன்னைமேல்நிலைப்பள்ளிக்கு கோபாலகிருஷ்ணன் நினைவு
கோப்பை , ரூ.10 ஆயிரம்பரிசு ,சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு
பெற்ற வத்தலகுண்டு அன்னைவேளாங்கண்ணிமெட்ரிக் மேல்நிலைப்
பள்ளிக்கு அரசன் ரியல்எஸ்டேட் கோப்பை , ரூ.7ஆயிரம் பரிசு வழங்கப்
பட்டது.பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற திண்டுக்கல் அங்குவிலாஸ்
அணிக்கு காவேரி அம்மாள் நினைவுகோப்பை , ரூ.5 ஆயிரம்பரிசு, சான்றிதழ்
வழங்கப்பட்டது.இரண்டாம் இடம்பெற்ற ஜம்புளியம்பட்டி ஜே.ஆர்.சி., பள்ளி
அணிக்கு கே.பி.எஸ்.,பில்டர்ஸ் கோப்பை , ரூ.3ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
மேற்கு ரோட்டரிசங்க செயலர் சந்திரசேகரன், குயின்சிட்டி ரோட்டரி சங்கசெயலர்
பார்கவி,ஒருங் கிணைப்பாள ர்பவன்ஜி பட்டேல், துணைஆளுநர்கள் செல்வகனி,
சித்ரா ரமேஷ் கலந்து கொண்டனர்.






