திருநெல்வேலி VM சத்திரம் அடுத்து ஆச்சிமடத்தில் மிகே மேமோசமான விபத்து

திரு­நெல்­வேலி VM சத்­தி­ரம் அடுத்து ஆச்சி மடத்­தில் மிக மோசமான விபத்து 05/08/2024 நடந்­தது நின்று கொண்டிருந்த நபர் மீது ஒரு பெண்­மணி தாறு­மா­றாக கார் ஓட்­டிட்டு
கொண்டு வந்து நேராக முட்டி மரத்­தின் மீது தூக்கி வீசி அந்த நபர் சம்­பவ இடத்தி­லேயே இறந்து விட்­டார் இறந்த நபர் பெயர் இசக்கிமுத்து
46 வயது இரண்டு பெண்குழந்­தை­கள் மூத்த பெண் 10/08/2024 அன்று இன்­ஜி­
னி­ய­ரிங் கவுன்­சிலிங் கலந்து மேற்­படிப்பு பயில்­வ­தற்­காக காத்­துக் கொண்­டிருக்கி­றார் இரண்­டா­வது பெண் ஆறாம் வகுப்பு படிக்கி­றார்
இவர் சொந்த ஊர் அய்­யனார் குளம்
பட்டி குடியிருப்­பது பாளை­யங்­கோட்டை மகாராஜா நகரில் இந்த விபத்து குறித்து மேற்­படி
வாக­னம் ஓட்டி வந்த பெண்­மணி 44 வயது என்று தக­வல் சொல்லி இருந்திருக்கி­றார்­கள் இறந்த­வர் இசக்கி முத்­தின் உறவி­னர்­கள் சம்­பவ இடத்தில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் இல்­லையென்­றால் இறந்­த­வர் உடலை வைத்து சாலை
மறி­யல் செய்­வோம் என்ற கோரிக்­கையை ஏற்று சிசி­டிவி ஆதாரத்து­டன் வழக்கை விசா­ரித்த
காவல்­ து­றையி­னர் விசா­ரித்து வாகனம் ஓட்டி வந்­த­வர் குரும்பூரை
சேர்ந்த ரம்­யராஜா மகள் சண்முக பிரியா என்றும் வழக்கு பதிவு செய்துள்­ள­னர் இந்­தப்பெண்­மணி
இதற்கு முன்பு ஒரு விபத்து
ஏற்­படுத்தி ஒரு மரணம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அந்த
வழக்கு தற்­போது இறுதி
கட்ட விசா­ர­ணை­யில் உள்­
ள­தா­க­வும் தக­வல் வெளி­
யாகி உள்­ளது.