முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான பணிகளை தொடங்கினார்.. அப்பல்லோவில் இருந்தபடி ஆலோசனை!

சென்னை ஜூலை 27 -முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி நடைபயிற்சி செல்லும்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள் ளது. இதனால் நடைபயிற்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று கிளம்பி வழக்கமான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். எனினும், மீண்டும் தலைசுற்றல் ஏற்பட உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு பல்வேறு பரிசோதனை கள் மேற் கொள்ளப்பட்டன.தேனாம் பேட்டை அப்போலமருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் நடந்தன. முதல்வரை பிரதமர் மோடி, ராகுல் காந்தி, ரஜினிகாந்த் மற்றும் திமுக கூட்டணித் தலைவர் கள் நலம் விசாரித்து இருந்தனர்.முதல்வருக்கு ஆஞ்சியோ பரிசோதனை- அப்பல்லோ முதல்வரின் உடல்நிலை குறித்த அப்பல்லோ மருத்துவ மனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை யில், முதல்வர் மு.க.ஸ்டாலினை பரிசோதனை செய்ததில்அவருக்கு இதயத் துடிப்பில் ஏற்பட்டமாறுபாடு காரணமாக தலைசுற்றல்ஏற்பட்டது தெரியவந்தது. அவருக்கு மேற் கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாகவே இருந்தது.முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்.தனது வழக்க மானபணிகளை விரைவில் மேற் கொள்வார் என்று தெரிவித்தது.எனினும், மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.மருத்துவ மனையில் இருந்தபடியே ஆய்வு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள், அது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கை கள் தொடர்பாக பயனாளிகள் மற்றும் அதிகாரிகளிடம் காணொலி காட்சி வழியாககேட்டறிந்தார். மேலும், தலைமை செயலாளருடன் ஆலோசனை செய்து முக்கிய கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.பிரதமருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பிய ஸ்டாலின் அந்த வகையில் இன்று காலை முதலே மருத்துவமனையில் இருந்தபடியே கட்சி மற்றும் அரசுப் பணிகளை முழுவதுமாக மேற் கொள்ளத் தொடங்கினார். பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ள நிலையில், முதல்வர் மருத்துவ மனையில் இருப்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசின் சார்பில் கலந்துகொள்ளும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விடம்,பிரதமரிடம் அளிக்க வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பினார். பின்னர்,திமுக துணை பொதுச் செயலாளரும் சகோதரியுமானகனிமொழியை சந்தித்து உரையாடல் நடத்தினார்.திமுக மண்டலபொறுப் பாளர்களுடன் ஆலோசனை இதன் தொடர்ச்சியாக திமுக மண்டலப் பொறுப் பாளர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, ஆ.ராசா, செந்தில் பாலாஜி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி, தங்கம் தென்னரசு ஆகியோரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பின் பேரில் அவர்கள் சென்றதாகக் கூறப்படுகி றது. சட்டமன்றத் தேர்தல் பணிகள், ஓரணியில் தமிழ்நாடு திமுகஉறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாட்களில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் செல்வார் என்று கூறப் படுகிறது. ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்த படி சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் தனது வழக்கமான பணிகளை தலைமைச் செயலகம் மற்றும் அண்ணா அறிவாலயம் சென்று மேற் கொள்வார் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.