ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு!

சென்னை: ஆம்ஸ்ட்­ராங் கொலை வழக்­கில் கைது செய்­யப்­பட்ட 10 பேரை குண்­டர் சட்­டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமி­ஷ­னர் அருண் உத்­த­ரவிட்­டுள்­ளார்.
கடந்த ஜூலை மாதம் 5ம்தேதி செம்பி­யம் காவல் நிலைய எல்­லைக்­குட்­பட்ட பகுதி­யில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலை­வர் ஆம்ஸ்ட்­ராங்(52) என்­ப­வர் கொலைசெய்­யப்­பட்­டார். இது குறித்து செம்பி­யம் காவல் நிலை­யத்தில் வழக்கு பதிவு செய்­யப்­பட்டு துரித விசா­ரணை மேற்­கொண்டு குற்­ற­வாளிகள் கைது செய்­யப்­பட்டு, நட­வ­டிக்கை மேற் கொள்­ளப்­பட்டு வருகிறது.ஆம்ஸ்ட்­ராங் கொலை வழக்­கில் கைது செய்­யப்­பட்ட  குற்­ற­வாளிகளிள் ராணிபேட்டை மாவட்­டம் பாலு (எ)பொன்னை பாலு (39),சென்னை,திருநின்­ற­வூர் சேர்ந்த ராமு (எ) வினோத் (38),புளி­யந்­தோப்பு திரு­மலை(45),திருநின்­ற­வூர் பகு­தியை சேர்ந்த அருள்(32),திரு­வள்ளூர் மாவட்­டம், ஆர்.கே.பேட்டை மணிவண்­ணன்(எ) மன்னா(25),ராணிபேட்டைமாவட்­டம், பொன்னை சந்­தோஷ்(22),சென்னை,திருநின்­ற­வூர் செல்­வராஜ் (49), திருவள்ளூர் மாவட்­டம், கள்ளிப்­பட்டு சிவ­சக்தி (எ)சிவா (26), ராணிப்­பேட்டை மாவட்­டம், சோளிங்­கர் விஜய் (எ)அப்பு (21), கோகுல் (25)ஆகிய 10 நபர்­களை சென்னை பெருநகரகாவல் ஆணை­யர் அருண் நேற்று குண்­டர் சட்­டத்தில் சிறையில் அடைக்க   உத்­த­ர­விட்­டார்.