குற்றாலம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்கா மலர் கண்காட்சி இன்று வரை நீட்டிப்பு

குற்றாலம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்கா மலர் கண்காட்சி இன்று ஜூலை 25ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் சாரல் திருவிழா மலர்கண்காட்சி 2025 அரசு சுற்றுச்சூழல் பூங்கா ஐந்தருவியில் கடந்த 20ஆம் தேதி துவங்கி 23ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் வாசனை பொருட்களைக் கொண்டு தமிழ்நாடு பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலும் பல வகைப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டும் கண்காட்சி வடிவமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதைக் கண்டு களிக்கும் வாய்ப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் என பார்வையாளர்கள் தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இதை ஏற்கும் வகையில் சுற்றுச்சூழல் பூங்கா மலர் கண்காட்சி ஆனது மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று ஜூலை 25ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.