ராஷி கன்னாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷி கன்னா, சமீபத்தில் நடித்த படங்கள் பெரிய அளவி

ல் பேசப்படவில்லை என்பதால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். சொல்லிக் கொள்ளும்படி பெரிய படங்கள் எதுவும் அமையாததால் கவலையில் இருந்த ராஷி கன்னாவுக்கு அதிர்ஷ்டம் அளித்துள்ளது.

முன்னணி நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்- மந்திரியுமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன்படி ஸ்ரீலீலாவுடன் இணைந்து இந்த படத்தில் அவர் இன்னொரு கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த படம் தனக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்றும், பட வாய்ப்புகள் இனி குவியும் என்றும் ராஷி கன்னா அதீத நம்பிக்கையில் இருக்கிறாராம்.