தேசிங்கு ராஜா 2.

எழில் இயக்கத்தில் விமல், புகழ், சினேகா குப்தா, ஜனா, பூஜிதா பொன்னடா, ஹர்சிதா பண்ட்லாமுரி, ரவி மரியா, சிங்கம்புலி, வையாபுரி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் தேசிங்கு ராஜா 2.

கதை

விமல் (குலசேகர பாண்டியன்) ஒரு காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருக்கிறார். அதே ஊரில் மற்றொரு காவல் நிலையத்தின் ஆய்வாளராக புகழ் பெண் வேடத்தில் (வர்னஜாலம்) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், குலசேகர பாண்டியனுக்கும், வர்னஜாலத்திற்கும் யார் பெரியவர்கள் என்பதில் போட்டா போட்டி வருகிறது. இந்த நேரத்தில் ‘மார்க்கெட் ரௌடி’ ஒருவன் கொல்லப்படுகிறான். இந்த கொலையை செய்தது எம்.எல்.ஏ. ரவி மரியா என ஒரு ரௌடி கும்பல் சந்தேகப்படுகிறது. இதனால், ரவி மரியாவின் மகனை தீர்த்து கட்ட பழியை தீர்த்து கொள்ள அந்த ரௌடி கும்பல் திட்டம் போடுகிறது. இதை தெரிந்து கொண்ட எம்.எல்.ஏ, மகனை ரௌடிகளிடம் இருந்து காப்பாற்ற, விமலின் உதவியை நாடுகிறான். இதில், எம்.எல்.ஏ. மகனின் உயிர் தப்பியதா? இல்லையா? என்பதே  படத்தின் மீதிக்கதை.

விமல், புகழ், சினேகா குப்தா, ஜனா, பூஜிதா பொன்னடா, ஹர்சிதா பண்ட்லாமுரி, ரவி மரியா, சிங்கம்புலி, வையாபுரி, மொட்டை ராஜேந்திரன் என எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். இவர்களின் உழைப்புதான் வீணாகிவிட்டது. செல்வாவின் ஓளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். வித்யாசாகரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

தேசிங்கு ராஜா முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய இயக்குநர் ஏழில் இந்த படத்தில் சிரிப்பைக் கோண்டுவர கோட்டைவிட்டு விட்டார். ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, புகழ், வையாபுரி என பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும், படத்தில் பெயரளவிற்கு கூட சிரிப்பு வரவில்லை.

எழில் அவர்களுக்கு உங்களிடம் வழக்கமான நல்ல சிரிச்சு ரசிக்கும்படியான படத்தை எதிர்பார்க்கிறோம்.

எழில் அவர்களுக்கு உங்களிடம் வழக்கமான நல்ல சிரிச்சு ரசிக்கும்படியான படத்தை எதிர்பார்க்கிறோம்.எழில் அவர்களுக்கு உங்களிடம் வழக்கமான நல்ல சிரிச்சு ரசிக்கும்படியான படத்தை எதிர்பார்க்கிறோம்.