அதிமுக கூட்டணி சேர விஜய்க்கும் எடப்பாடி மறைமுக அழைப்பு!

சென்னை, ஜூலை. 05–
தி.மு.க. அரசை அகற்ற ஒத்த கருத்­துள்ள கட்­சி­கள் ஒன்­றி­ணைய வேண்­டும் எனக் கூறி அ.தி.மு.க. கூட்­ட­ணி­யில் சேர விஜய்க்கு எடப்­பாடி பழ­னி­சாமி மறை­முக அழைப்பு விடுத்­தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலா­ளர் எடப்­பாடி பழனி­சாமி தமி­ழ­கம் முழு­வ­தும் முதற்­கட்­டமாக மேட்­டுப்­பாளை­யத்­தில் இருந்து வரு­கிற 7–ஆம் தேதிமுதல் 7 மாவட்­டங்­க­ளில் சுற்­றுப்பய­ணம் மேற்­கொள்­கி­றார். அதற்­கான லட்­சினை மற்­றும் பிரசார பாடலை வெளி­யிட்­டார். பின்­னர் அவர் நிரு­பர்­க­ளுக்கு பேட்டி அளித்­தார். அப்போது அவர் கூறி­யதா­வது: மக்­க­ளி­டம் செல். அவர்­க­ளு­டன் வாழ்.அவர்­க­ளி­ட­மி­ருந்து கற்­றுக்­கொள். அவர்­களை நேசி. அவர்­களுக்­காக சேவை செய் என்றார் அண்ணா. அண்ணா வழி­யில் மக்­க­ளுக்­காக உழைத்­த­வர்­கள் நம் இரு பெரும் தெய்­வங்­களான முன்­னாள் முதலமைச்­சர்­கள் எம்­ஜி­ஆர் மற்­றும் ஜெயல­லிதா. இப்போ­து­ தான் ந மக்­களை சந்­தித்து பேசு­கி­றார் என்று.என்­னைப் பற்றிகூறு­வ­தாக முதல்­வர் ஸ்டாலின் அவ­ரைப் பற்­றியே பேசிக்கொண்டிருக்­கி­றார் .

நான் எப்­போ­தும் இயல்­பாக மக்­க­ளோடு இருப்­பவன். மக்­களை சந்­தித்துக்கொண்டு அவர்­க­ளி­டம் பேசிக் கொண்டு­தான் இருக்­கி­றேன். அத­னால்­ தான் நானும் அதிமுகவும் ஒலித்துக் கொண்டிருக்­கி­றோம். மிக முக்­கியமான அத்தியாயம் தான் இந்த எழுச்சி பய­ணம். தேர்­தல் பிர­சா­ரம் தானே என்று நீங்கள் நினைக்­க­லாம். இது தேர்­தல் பிரச்­சா­ரம் தான். ஆனால் இந்த பய­ணத்­திற்கு மிகப்­பெ­ரிய நோக்கம் தேவை இருக்­கி­றது. எனது இந்த பய­ணத்தின் நோக்­கம் திமுக ஆட்­சி­யின் குறை­களை மக்­க­ளி­டம் கூறு­வது. இந்த ஆட்­சி­யில் சிறுமி முதல் முதிய­வர்­கள் வரை பாது­காப்­பில்­லாத சூழல் நில­வு­கி­றது.தினந்­தோ­றும் பாலியல் வன்கொடு­மை­கள் ,கொலை, கொள்ளை வழிப்­பறி திருட்டு என்று பத்திரி­கை­களில் வந்த வண்­ணம் உள்­ளன. அதி­முக மக்­க­ளுக்­காக தொடங்கப்­பட்ட இயக்­கம். 30 ஆண்டு களுக்கு மேல் தமி­ழகத்தில் ஆட்சி புரிந்த இயக்­கம். அதிமுகவின் பத்து ஆண்டுகால ஆட்­சி­யில் எண்­ணற்ற திட்­டங்­கள் நிறை­வேற்­றப்­பட்டு தமிழ­கம் உயர்த்­தப்­பட்­டது. இந்தியாவி­லேயே முதல் மாநி­லம் என்ற அள­வில் திட்­டங்­களை கொண்டு வந்து மக்­க­ளுக்கு நன்மை கொடுத்த இயக்­கம். இந்த 50 மாத கால ஆட்­சியில் மக்­கள் பட்ட துன்­பங்­கள் துய­ரங்­கள் வேத­னை­கள் அத்­த­னை­யும் மக்­க­ளி­டம் எடுத்துச் சொல்லி இந்த ஆட்­சியை அகற்று­வது தான் எங்­க­ளது நோக்­கம்.இந்த சுற்றுப் பய­ணத்­தின் மூலம் மிகப் பெரியமாற்­றம் ஏற்­ப­டும். மக்­க­ளு­டைய ஆத­ரவை அதிமுக பெரும். 2026 சட்­ட­மன்றத் தேர்­த­லில் வென்று அதிமுக வர­லாற்றை படைக்­கும். 2021 பொதுத்தேர்­த­லின் போது நிறைவேற்ற முடியாத 525 அறி­விப்­புகளை திமுக வெளி­யிட்டு இருக்­கி­றது.மக்­களை ஏமாற்றி மடை மாற்­றம் செய்து ஆட்­சியை பிடித்­தது திமுக. பொய்யை மூல­த­னமாக வைத்து மக்களை ஏமாற்றி ஆட்சி பிடித்­ததை மக்­க­ளி­டம் எடுத்துச் சொல்­வோம்.ஒவ்­வொரு மாவட்­டத்திற்­கும் செல்கின்­ற­ போது அங்கு நில­வுகின்ற பிரச்­சி­னையை முன்­னிறுத்தி நாங்­கள் பிரச்­சா­ரம் மேற்­கொள்­வோம். விஜய் தனித்துப் போட்­டியிடு­வேன் என்று அறிவித்­தது அவ­ரது முடிவு. பாஜகவும் அதிமுகவும் ஆதாயத்திற்­காக கூட்­டணி வைத்துள்­ளதாக விஜய் விமர்­சித்துள்­ளார் என்­கிறீர்கள். எல்­லாக் கட்­சிகளும் தங்­களை வளர்ப்­ப­தற்­காக விமர்­ச­னம் செய்­வது இயல்பு. விஜய், திமுக பாஜகவு­டன் கூட்­டணி இல்லை. என்று சொல்லி இருக்­கி­றார். ஆனால் அதி­முகவு­டன் கூட்­டணி இல்லை என்று நேர­டியாக சொல்­ல­வில்லை என்­கிறீர்கள். நீங்­கள் இந்த கேள்­வியை அவ­ரி­டம் தான்கேட்க வேண்டும். திமுக ஆட்­சியை அகற்ற வேண்டும் அதில் ஒத்த கருத்துள்ள கட்­சிகள் இணைய வேண்டும் என்பது­ தான் எங்­க­ளது நோக்கம். அவ்­வாறு நோக்­கம் உள்­ள­வர்­க­ளு­டன் நாங்­கள் கூட்­டணி வைப்­ப­தில் மகிழ்ச்சி அடை­கி­றோம்.அவர்­க­ளும் இதற்கு ஒத்து­ழைக்க வேண்டும் என்­ப­து­தான் எங்­கள் கருத்து. அச்­சு­றுத்­தல்­கள் வந்­த­தன் அடிப்­ப­டை­யில் தான் எனது பாதுகாப்பு உயர்த்­தப்­பட்­டுள்­ளது. மத்திய அமைச்­சர் அமித்ஷா அதி­முக, பாஜக கூட்­ட­ணிக்கு அதிமுக தலைமை ஏற்­கும். அதிமுக ஆட்சி அமைக்­கும் .முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் எடப்­பாடி பழனிச்­சாமி என்று சொல்லியிருக்­கி­றார். திருப்­பு­வ­னத்திற்கு சென்று மகனை இழந்து பாதிக்­கப்­பட்ட தாய்க்கு ஆறு­தல் சொல்­வோம்.அந்த உயர் அதிகாரி யார் என்­பதை நாட்டு மக்­களுக்கு வெளிச்­சத்திற்கு கொண்டு­வர வேண்டும்.சிபிஐ விசா­ரணை மேற்­ கொள்ளும் போது அதற்­ கெல்­லாம் விடை கிடைக்கும். சட்­டம் ஒழுங்குசீர­ழிந்­துவிட்­டது என்­பதற்கு பத்திரி­கை­களிலும் ஊடங்­க­ளிலும் வருகிற செய்தியே சான்று. உச்சநீதி மன்ற தீர்ப்­பின் அடிப்­படை­யிலே நாங்­கள் கடந்த நாடாளுமன்­றத் தேர்­த­லில் போட்­டியிட்­டோம். எங்­களது கூட்­ட­ணிக்கு இன்னும் பல கட்­சிகள் நிச்­ச­ய­மாக வரும். வள­மான கூட்­டணி அமைக்­கப்­படும்.நிச்­ச­யமாக 2026 தேர்­தலில் திமுக கூட்­ட­ணியை வென்று மகத்­தான ஆட்சியை அமைப்­போம். திமுக பரி­தாபமான நிலைக்­குப் போய்விட்டது. வீடு வீடாக சென்று கத­வைத் தட்டி உறுப்­பி­னரை சேர்க்­கும் அள­விற்கு சென்­றுவிட்­டது. எல்லா கட்­சியிலும் விருப்­பப்­பட்ட தான் மக்கள் சேர்­வார்­கள். அதிமுக வெற்றி ஆட்சி அமைத்த பிறகு தற்­போ­தைய ஸ்டாலின் எங்­க­ளது வீட்டிற்கு வந்­தால் வர­வேற்­போம். இவ்­வாறு அவர் கூறி­னார். த.வெ.க.செயற்குழு கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்­சித்தலை­வர் விஜய், கொள்கை எதிரி பா.ஜ.க. வுடன் ஒருபோதும் கூட்­டணி வைத்­துக் கொள்ள மாட்­டோம் என திட்­ட­வட்­ட­மாக கூறி­னார். இந்­நி­லையில் இன்று நிருபர்­க­ளுக்கு பேட்டி அளித்த எடப்­பாடி பழனிசாமியி­டம் இது குறித்து கேட்­ட­னர்.அதற்கு பதில் அளித்த அவர் தி.மு.க. ஆட்­சியை அகற்ற வேண்டும். அதில் ஒத்த கருத்துள்ள கட்­சிகள் இணைய வேண்டும் என்பது தான் எங்­கள் நோக்­கம்.அவ்­வாறு நோக்­கம் உள்­ளவர்­ க­ளு­டன் நாங்­கள் கூட்டணி வைப்­ப­தில் மகிழ்ச்சி அடை­கி­றோம். இதற்கு அவர்­க­ளும் ஒத்து­ழைக்க வேண்டும் என்­றார். இதன் மூலம் அ.தி.மு.க.கூட்­ட­ணியில் சேர விஜய்க்கு எடப்­பாடி பழ­னிசாமி மறை­முக அழைப்பு விடுத்துள்­ள­தாக கரு­தப்­ப­டுகி­றது. இந்த அழைப்பை விஜய் ஏற்­பாரா என்று தெரிய வில்லை.