தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கல்லிடைக் குறிச்சி கோட்டம் மற்றும் சேரன் மகாதேவி உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும்
சேரன்மகாதேவி பிரிவு அலுவல கத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பெரியார் மகளிர் பள்ளியில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் திருமதி அகிலாண்டேஸ்வரி மற்றும் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற் பொறியாளர் திரு. சுடலையாடும் பெருமாள் ஆகியோரின் சீரான வழிகாட்டல் மற்றும் அறிவுறுத்த லின் படி 04.07.2025 இன்று அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு அறிவுரை கள்,மற்றும் மின் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆனது உதவி செயற் பொறியாளர் / சேரன்ம காதேவி S.சந்திரன்,மற்றும் உதவி மின் பொறியாளர் /P. கைலாச மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சமுக ஆர்வலர் திரு.நயினா முகம்மது மற்றும் பிரிவு அலுவலக பணியா ளர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மின் விபத்திலிருந்து பாதுகாத்து கொள் ளுதல் மற்றும் மின் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரம் பெற்று சென்றனர்.
மேலும் பாதுகாப்பு தொடர்பான வினாடி வினா கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . இந்த பாதுகாப்பு நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்த பெரியார் மகளிர் பள்ளிக்கு தமிழ்நாடு மின் பகிர் மான கழகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியார் மகளிர் பள்ளியில்மின் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்!






