நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இன்று 1 – 3 – 2026 ஞாயிற்றுக்கிழமை ஈரான் மீது பயங்கரவாத தாக்குதலை நடத்திய,மற்றும் ஈரான் சுப்ரீம் லீடர் ஆயத்துல்லா அல் காமேனி அவர்களை கொலை செய்த அமெரிக்க -இஸ்ரேலை கண்டித்து வீரவநல்லூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக)பேரூர் கிளையின் சார்பில் கையில் மெழுகு திரி ஏந்தி அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் ஈரான் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அமெரிக்க இஸ்ரேல் கண்டித்து கையில் மெழுகு திரி ஏந்தி அமைதி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வீரவநல்லூர் பேரூர் கிளையின் சார்பாக வீரவநல்லூர் ரஹ்மத் நகர் புதுமனைத் தெரு அல் அமீன் பள்ளிவாசல் முன்பு (1-3 – 2026 ஞாயிற்றுக்கிழமை)இரவு 8 மணி அளவில் நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) நெல்லை மாவட்ட துணைத் தலைவர் வீரை P.நவாஸ் ஷரீப் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது.
இந்நிகழ்வில் வீரவநல்லூர் தமுமுக மமக நகர தலைவர் ஜாகிர் உசேன்,தமுமுக நகர செயலாளர் அசன் மைதீன், மமக நகர செயலாளர் ஆஷிக் இலாஹி,தமுமுக மமக நகர பொருளாளர் சாகுல் ஹமீது, வீரவநல்லூர் பாய் நெசவாளர் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் H.முகம்மது கனி, திமுக 14 வது வார்டு உறுப்பினர் ரஜப் இஸ்மாயில், தமுமுக மமக நகர துணை செயலாளர்கள் கோதர் செய்யது அலி,மெக்ராஜ் நியாஸ்,காதர் மைதீன், சாதிக் ,6வது வார்டு கிளை செயலாளர் அசனப்பா,,14வது வார்டு கிளைத் தலைவர் கோதர் இப்ராகிம்,வீரவநல்லூர் முஸ்லிம் ஜமாத் முன்னாள் பொருளாளர் நாகூர் கண்ணு,தெற்கு பாரதி நகர் கிளைத் தலைவர் அல்லா பிச்சை, மற்றும் ரஹ்மத் நகர் புதுமனை தெருவை சேர்ந்த அலி சேக், ஆஷாத், பகத் மைதீன், மற்றும் பெரியவர்கள், சிறுவர்கள், என பலரும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.






