காரில் கடத்திவரப்பட்ட 7 லட்சம் மதிப்பிலான 3- டன் குட்கா பறிமுதல்-! காரிமங்கலம் போலீசார் அதிரடி!!

தர்­ம­புரி. ஜூலை.02 தரு­ம­புரி மாவட்­டம் காரி­மங்­க­லம் ,கும்­பா­ரஅள்ளி சோதனை சாவடி வழியாக குட்கா பொருட்­கள் கடத்தி செல்­வதாக பாலக்­கோடு டி.எஸ்.பி மனோ­கரன் அவர்­க­ளுக்கு இரகசிய தகவல் கிடைத்­தது.அவரது உத்­த­ரவின் பேரில் இன்று விடியற்­காலை காரி­மங்­கலம் இன்ஸ்­பெக்­டர் பார்த்­திபன் தலை­மை­யில் எஸ்.ஐ.க்கள் சுந்­த­ரமூர்த்தி, ஆனந்­த­கு­மார் ஆகி­யோர் தீவிரவாகன சோத­னை­யில் ஈடுபட்­டிருந்­த­னர்.அப்­போது அவ்­வ­ழி­யாக வந்த சந்­தே­கத்­திற்­கி­ட­மான 3 சொகுசு கார்­களை போலீ­சார்தடுத்து நிறுத்த முயற்­சித்­த­னர்.ஆனால் வாகனங்­கள் நிற்­கா­மல் சென்­றன, இத­னால் சந்­தே­க­ம­டைந்தபோலீ­சார் சொகுசு காரை துரத்தி சென்­ற­னர். போலீ­சார் துரத்தி கொண்டு வருவதை அறிந்­த­வர்­கள் சொகுசு கார்­களை சாலை­யோ­ரம் நிறுத்­தி விட்டு தப்பி சென்­ற­னர். சொகுசு கார்­களை பறிமுதல் செய்து சோத­னை­யிட்­ட­போது100-க்கும் மேற்­பட்ட மூட்­டை­களில் சுமார் 3-டன் அள­விற்கு 7 இலட்சம் ரூபாய் மதிப்பி லான தமிழக அர­சால் தடைசெய் யப்­பட்­டுள்ள குட்கா பொருட்­கள் கடத்தி வந்­தது தெரியவந்­தது. குட்­காவு­டன்,சுமார் 15லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்­களை பறி மு­தல் செய்த போலீ­சார் இது குறித்து வழக்கு பதிவு செய்­துவி­சா­ரணை நடத்தி வருகின்­ற­னர்.