குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பு வாசிகள் அவதி
ஸ்ரீமுஷ்ணம் மாங்காகுளத் தெருவில் உள்ள மங்கை ஆழ்வார் தீர்த்த குளத்தில் மீன்கள் ஏராளமான அளவில் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு சுவாச பிரச்சனையும் எழுந்து வருகிறது. உடனடியாக மீன்களை அகற்றி குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என அரசுக்கு குடியிருப்பு வசிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். திடீரென மீன்கள் செத்து மிதப்பதால் தண்ணீரில் ஏதேனும் விஷம்
கலக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் தண்ணீரில் நஞ்சு உருவாகியுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கும் குடியிருப்பு வாசிகள் அருகில் ஸ்ரீமுஷ்ணம் நகரத்திற்கு குடிநீர் வழங்கி வரும் மிகப்பெரிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதற்கு நீர் வழங்கும் போர்வெல்லும் இருந்து வருவதால் மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.






