திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில்
வரும் ஜூலை 5-ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடை பெறவுள்ளது என முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா அவர்கள்,தி ரைஸ் அனைத்துலக தமிழ் எழுமின் தொழிலதிபர்கள் கூட்டமைப்பு நிறுவனர் அருட்பணி ஜெகத்கஸ்பர் முன்னிலையில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தகவல் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப் புடன், கிவ் லைஃப் அறக்கட்டளை யும் தி ரைஸ் அனைத்துலக தமிழ் எழுமின் தொழிலதிபர்கள் கூட்டமைப்பு, இணைந்து நடத்தும் தென் தமிழகத்தின் மாபெரும் இளையோர் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை மாதம் 05-ம் தேதி திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் காலை 8.00 மணி முதல் தொடங்கி மாலை 5.30 மணி வரை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம்,அண்ணா பல்கலைக்கழகம், சென்னை வாழ் நெல்லை மக்கள் பேரமைப்பு, ரோட்டரி தாமிரபரணி கிளை, ஆலடி அருணா கல்வி அறக்கட்ட ளை குழுமம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி களின் ஆதரவுடன் நடத்தப்படுகி றது.எம்.ஆர்.எப், டி.வி.எஸ் லூகாஸ், டெக் மகேந்திரா ஹூண்டாய், ராணே ஸ்ரீராம் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி,இக்விடாஸ் வங்கி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இவ்வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 7,500 வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும் பும் இளைஞர்கள் www.givelifes.com என்ற இணையதளம் வழியாகவும், 91500 60036, 75300 88293 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாகவும் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு
செய்கிறவர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. கடைசி நாள் நேரடியாக வருகிறவர்களுக்கு சிறிய நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் முன்பதிவுசெய்கிறவர்களுக்கு இவ்வேலை வாய்ப்புமுகாமில் பங்கேற்பது குறித்தும், வேலை வாய்ப்பில் பங்கேற்று சிறப்பாக பதில்கள் வழங்குவது தொடர்பாக வும்,நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் இணையவழியில் பயிற்சிகள் வழங்குவார்கள். நேர்காணலை எப்படி எதிர்காெள்ள வேண்டும் .நிறுவனங்கள் என்ன எதிர் பார்க்கின்றன, எப்படி தன் விபரக்குறிப்பு எழுதவேண்டும் போன்ற பயிற்சிகளை இணைய வழியில் எல்லோருக்கும் வழங்கு வார்கள். எனவே, இணைய வழி மூலம் பதிவு செய்து வேலை நாடுநர்கள் பயன்பெறலாம்.
உற்பத்தி துறை நிறுவனங்கள். நிறுவனங்கள்,மருத்துவம் மற்றும் நலவாழ்வுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என பல்வேறு துறைகள் பங்கேற்பதும்சிறப்பாகும். வங்கி ஆயுட் காப்பீட்டு துறை, குறிப்பாக பொறியியல்துறை, தொழில் நுட்பத்துறை பாலிடெக்னிக் படித்த இளைஞர். களுக்கு உற்பத்தி துறையில் வேலை வாய்ப்பு அதிகமாக இருக்கின்றன.இந்த வேலை வாய்ப்பு முகாமில் வேலை கிடைக்காமல் போகும் இளைஞர் களை அத்தோடு விட்டு விடாமல் அவர்கள் என்ன காரணங்களி னால் வேலை கிடைக்கவில்லை போன்ற விபரங்களை ஆராய்ந்து அறிந்து அதன் அடிப்படையில் தொடர்ந்து அவர்களுக்கு பயிற்சி களும் வழிகாட்டுதல்களும் வழங்கி கிவ் லைஃப் அறக்கட்டளை அவர் களை ஒரு நல்ல வேலையில் அமர்த்தும் முயற்சிகளை செய்யும் என்பதும் தனித்துவம் ஆகும். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங் களின் இளைஞர்கள் பதிவு செய்வ தோடு, இந்த மாவட்டங் களில் செயல் பட்டு வரும் தொழில் வணிக நிறுவனங்களையும் கல்லூரி களையும் இவ்வேலை வாய்ப்பு முகாமில் தங்களைப் பதிவு செய்ய அன்புடன் அழைக்கிறோம். இவ்வே லை வாய்ப்பு முகாமிற்கு முழு ஆதர வும் ஒத்துழைப்பும் உற்சாகமும் தரும் திருநெல்வேலி மாவட்டத் திற்கான பொறுப்பு அமைச்சர் மாண்பு மிகு திருகே.என்.நேரு அவர்களுக் கும், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்நிகழ்ச்சியில், சென்னை வாழ் நெல்லை மக்கள் பேரமைப்பினர் திரு.சங்கர் மணி அவர்கள், திரு.சைமன் அவர்கள், தொழில்நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்சார்லஸ் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூலை 5-ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தகவல்






