தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் உரை
சென்னை, ஜூன்.20&”தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன,” என,சர்வதேச இயந்திர கண்காட்சி துவக்க விழாவில்,முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னையில் சர்வதேச
இயந்திரகருவிகள் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:
திராவிடமாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. சேலத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம் அமைத்துள்ளோம்.
2021 ம் ஆண்டு முதல் ஏற்றுமதிகளை அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழகம். தொழில் வளர்ச்சி, தொழில் துறையினர்,தொழிலாளர் நலனுக்கு என்னவேல்லம் தேவை என உன்னிப்பாக கவனித்து செயல்படுகிறேம் . இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் பங்கு 11.9 சதவீதம் ஆக உள்ளது. ஜவுளி இயந்திரங்கள், மின்ன பொருட்கள் உற்பத்தியில் 2 வது இடத்தில் தமிழகம் உள்ளது.மிகுந்த நம்பிக்கை தி.மு.க., ஆட்சியில் 14 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.நாட்டில் உள்ள மொத்தபெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 41சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர். தமிழகம் மீது உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமானது மின்சாரம்.
தொழில் நிறுவனங்களுக்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில், ரூ.3 ஆயிரத்து 617 கோடியே 62 லட்சம் தான் ஒதுக்கினார்கள்.இரண்டு மடங்கு தற்போது தி,மு.க., ஆட்சியில், இரண்டு மடங்கு அதிகமாக, இது வரைக்கும் ரூ.6 ஆயிரத்தி 626 கோடி நிதிஒதுக்கி இருக்கிறோம்.தமிழகத்தை இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும். 2024-& 25 ம் ஆண்டில் 30.50 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்து , இந்திய அளவில் 3ம் இடத்தை பிடித்துள்ளோம்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.






