தாமிரபரணி ஆற்றில் தூய்மைப்பணி – 4வது கட்டமாக பாபநாசம் அகத்தியர் அருவியின் பகுதியில் நடைபெற்றது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் திரு இளையராஜா IFS அவர்களின் வழிகாட்டுதலின்படி, பாபநாசம் அகத்தியர் அருவி, தாமிரபரணி ஆற்றில் இன்று 16.6.254ம் நாள் தூய்மைப்பணி நடைபெற்றது.

பாபநாசம் வனச்சரக அலுவலர் திரு. E.M.குணசீலன் அவர்களின் தலைமையில் இன்றைய தூய்மைப் பணி நடைபெற்றது. அகத்தியர் கோயில் முதல் அருவி வரை ஆற்றில் தேங்கிக்கிடந்த
துணிகள், பலவிதமானகழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும்அள்ளப்பட்டன.

குறிப்பாக ஆற்றின் கரையில் பெருவாரி
யாக மக்களால் போடப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.
அற்றப்பட்ட அனைத்து கழிவுகளும் முறையாக, சாக்கு பைகளிலும், துணி பொட்டலங்களிலும் கட்டப்பட்டு, அகத்தியர் கோயில் சாலை பகுதியில், நகராட்சி வாகனம் மூலம் கிடங்கிற்கு எடுத்துச்செல்ல ஏதுவாக சுமந்து அங்கே வைக்கப்பட்டன.இன்றைய பணிக்கு நேரில் வந்து எங்களுடன் , திருநெல்வேலி வேளாண்மை ஆராய்சியாளர் திரு.ஆறுமுகம் அவர்களும், ஆல் தி சில்ரன் டிரஸ்ட் மதன் அவர்களும் தூய்மைப்
பணியில் ஈடுபட்டனர்.
இன்று எதிர்பாரதவிதமாக மழை காரணமாக ஆற்றிலும்
அருவியிலும் அதிக தண்ணீர்
வந்தமையால், திட்டமிட்டபடி,
ஆற்றின் உள் புதைந்து கிடந்த
துணிகள் கழிவுகளை அள்ள
இயலவில்லை. இருப்பினும்
அருவிப் பகுதிவரை கரை வழி
அரை கி.மீ தூரம் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இன்றையப் பணிகளை ராமசாமி, P.சங்கர், செல்லத்துரை ஐயாத்துரை ,பக்கா, அழகுராஜா,
அம்பை துரை, மலை சுந்தரம், ஒய்யா செய்தனர்.

இன்றுடன் 2025ம் ஆண்டு கோடைகால தூய்மைப் பணி நிறைவு பெற்றது.பாபநாசம்பகுதி தூய்மைப் பணி 21 நாட்கள், மலை பகுதியான காரையாறு சொரிமுத்தைய்யன கோயில் தூய்மைப்பணி 3 நாட் கள், அகத்தியர் அருவி தூய்மைபணி 1 நாள். ஆக மொத்த 2025
கோடை கால தூய்மைப் பணி 25 நாட்கள் ஆகும்.

இன்று 16.06.2025 சேகரிக்கப்பட்ட கழிவுகள்

துணிகள் – 600 kg
செருப்புகள் -240 kg
நாப்கின், டைபர் -160 kg
பாட்டில்கள் – 300 Kg
பாலீதீன் கழிவுகள் – 780 kg
சோம்பு, சேம்பு கவர்
புது துணிகவர்
சீயக்காய் கவர், etc -300 Kg
தீப சட்டிகள் -120 kg
சாக்குபைகள் -120 kg

மொத்த எடை = 2620 Kg

தூய்மைப் பணி ஒருங்கிணைப்பு
கிரிக்கெட்மூர்த்தி
Asst. Director of Statistics (Rtd)
சுற்றுச்சூழல் ஆர்வலர்
விக்கிரமசிங்கபுரம்