யாசகம் எடுத்த ஒரு கோடியே அறுபது லட்ச ரூபாய் பணத்தினை பொதுமக்கள் நலனுக்காக உதவிய தன் ஆர்வலர் பூல்பாண்டி!

 

யாசகம் எடுத்த ஒரு கோடியே அறுபது லட்ச ரூபாய் பணத்தினை பொதுமக்கள் நலனுக்காக உதவிய தன் ஆர்வலர் பூல்பாண்டி:

யாசகம் எடுப்பதை நிறுத்த போவதாக அறிவித்தார்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் வியாழக்கிழமை என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்தும்
முதியவர்கள்,குடும்பத்தால் கைவிட பட்டோர்,
என ஏராளமானோர் தங்கள் தேவைக்காக மட்டுமே யாசகம் எடுக்க வருவது வழக்கம்.
இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிட பட்டோர் பலரும் யாசகம் எடுக்க வந்திருந்தனர்.
அதுபோல் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுக்கா ஆளங்கிணறு
பகுதியை சேர்ந்த
முத்தையா மகன் பூல் பாண்டியன் (75)
என்பவர் யாசகம் எடுக்க காட்டுமன்னார்கோவில் கடைவீதிக்கு வந்திருந்தார்.
அவருக்கு பல்வேறு தரப்பினரும் யாசகம் அளித்தனர்.
அப்போது அவர் தெரிவித்தது..
எனது பெயர் பூல் பாண்டியன் எனக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சரஸ்வதி (55)இறந்து விட்டார்.
இரண்டு மகள்கள் முருகவள்ளி, மகாலெட்சுமி மற்றும் ஒரு மகன் கார்த்திகேயன் உள்ளனர்.
அவர்களுக்கு திருமணம் முடிந்து நல்ல நிலையில் உள்ளனர்.
மனைவி இறந்த துக்கம் தாக்காமல்
கடந்த 1980 ஆம் ஆண்டு பாம்பேயில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணியம் கோவிலுக்கு யாசகம் எடுக்க சென்றேன்.
அங்கு 13 வருடங்கள் யாசகம் எடுத்த பணத்தினை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கினேன்.
அதன் பின்னர்
தமிழ் நாடு வந்தேன்.
தமிழகம் முழுவதும்
பல்வேறு இடங்களில் யாசகம் எடுக்க துவங்கினேன்.
அதில் வரும் பணத்தினை 400 பள்ளிக்கூடங்கள் மற்றும் நிவாரண நிதிக்காக 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக சென்று கொடுத்து வந்தேன்.
அது மனத்திற்கு மகிழ்ச்சியையும் , நிம்மதியும் ஏற்படுத்தியது.
இது வரை நான் யாசகம் எடுத்த பணம் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் வரை அரசின் பொது நிவாரணத்திற்கு கொடுத்து உள்ளதாக அரசு சார்பில் தெரிவித்தனர்.
இதுவரை
யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் பூல் பாண்டியன், தான் யாசகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தினை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, இலங்கை தமிழர் நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி,அரசு பள்ளிகூட மாணவர்களுக்கு நோட்புக், குடிதண்ணீர்,மேசை, நாற்காலி வாங்கி வழங்குவது என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்.
இவர் கடந்த சில சில நாட்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள கோவில்களில், கடைவீதியில் யாசகம் மூலம் கிடைத்த ரூபாய் 10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமாரிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரும்
என்னை அடையாளம் கண்டு உள்ளதாலும்,
தனது வயது மூப்பு காரணமாகவும் தன்னால் நடக்க முடியாத நிலை உள்ளது ஆகவே தனது பணியினை மேற்கொண்டு தொடர்வது குறித்து யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடைசியாக யாசகம் எடுக்கும் பணத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளதாகவும், மேலும் எனது பணியினை தொடர்ந்து செய்வேன் என உறுதியாக கூறினார்.