சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை மீட்பு. போலீசார் விசாரணை.

 

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை மீட்பு. போலீசார் விசாரணை.

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் மாதா கோவில் தெருவில் யாரும் வசிக்காத வீட்டின் பின்புறம் இன்று காலை குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அழுகுரலைக் கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை அங்கு கிடப்பது தெரியவந்தது. இதை அடுத்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் 108 வாகனத்துடன் அங்கு வந்த காவல் துறையினர் குழந்தையை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தேவையான சிகிச்சைகள் செய்யப்பட்டு கடலூரில் உள்ள குழந்தை சிசு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிறந்த பெண் குழந்தையை விட்டு சென்றது யார்? என விசாரணை செய்து வருகின்றனர்.