சென்னை, ஆக. 3 தமிழ்நாட்டில்
தென் மேற்கு பருவமழை
பெய்து வரும் நிலையில்
கடந்த சில நாட்களாக சிக்
குன் குனியா காய்ச்சலும்
அதிகமாகபரவ தொடங்கி
உள்ளது.
டெங்கு, மலேரியா,
வைரஸ் காய்ச்சல், மர்ம
காய்ச்சல் என பல வகை
காய்ச்சல் மக்களுக்கு பரவி
வந்தாலும் சிக்குன் குனியா
காய்ச்சல் வந்தவர்கள் மிகவும்
முடங்கி விடுவார்கள்.
காய்ச்சல் வந்தாலே உடல்சோர்வடையும் உடம்பு நெருப்பால்
கொதிக்கும் எனவும் சாப்பிட பிடிக்காது.பசியின்மை அடித்துபோட்டது போல் உடம்பு வலிஏற்படும். காய்ச்சலில் பலவகைகள் இருந்தாலும்
சாதாரணகாய்ச்சல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.
பெரும்பாலான வைரஸ்காய்ச்சல் அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின்மூலம் பரவும். பொது
வான வைரஸ் காய்ச்சல்ஒரு வாரம்
வரைநீடிக்கலாம். இந்தவகைகாய்ச்சல் தொண்டையில்நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இதற்கு சரியானசிகிச்சையைமேற் கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்தி விடலாம்.ஆனால் டெங்கு, சிக்
குன் குனியாகாய்ச்சல் என்
பது ஏ.டி.எஸ்.கொசு
கடிப்பதால் வருகிறது.
கடுமையான காய்ச்சல்மற்றும் தலைவலி, உடல்
வலி, மூட்டு வலி, வயிற்றுவலி,
தொடர்ச்சியான
வாந்தி, உடல் சோர்வு ஆகி
யவை இதன் அறிகுறிகளாகும்
.
சிலருக்கு உடலில்அரிப்பு, சிவ
ப்பு புள்ளிகள்,தோன்றும்.
இந்த காய்ச்சல் தீவிரமாகி விட்டால் உடலின்உட்பகுதியில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும்.
மூட்டு வலியும் அதிகமாகும்
. ரத்தத்தின் தட்டையணுக்கள்
குறைந்து உயிருக்கு ஆபத்தாகி விடும்.
எனவே சிக்குன் குனியாநோய்
வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நோய்
பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
இந்த நிலையில் தமிழ்
நாட்டில் சிக்குன் குனியா
காய்ச்சல் அனைத்து
மாவட்டங்களிலும் பரவ
லாக காணப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூன்
மாதம் வரை 1,451
பேருக்கு சிக்குன் குனியா
அறிகுறி இருந்தது. அதில்
331 பேருக்கு சிக்குன்
குனியா உறுதி செய்யப்பட்டு
ள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில்
இல்லாத அளவு இந்த ஆண்டு
பாதிப்பு இருந்தாலும்,பாதிக்கப்பட்ட அனைவரும்நலமுடன்
உள்ளதாகவும் மக்கள் அச்சம்
கொள்ளதேவையில்லை
என்றும் பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் கண்காணிப்பு மற்றும்
கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிர
மாகமேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்படத்தேவை இல்லை என்றும்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்






