பயின்ற பள்ளிக்கு நாற்காலி மேஜைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கொடுத்த முன்னாள் மாணவர்கள்

மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள மனோகரா நடுநிலைப் பள்ளியில் 2015-2016ம் ஆண்டு படித்த மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து சந்தித்துக் கொள்ளும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் சங்கர பாண்டி வரவேற்புரை ஆற்றினார். மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன்,மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் சுவாமிதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து 2015-16ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவன் சந்தித்துக் கொண்டு பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்டு பள்ளியில் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நினைவாக மேஜை நாற்காலி உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கியும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விதமான போட்டிகளை நடத்தி சிறப்பு பரிசுகளையும் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் மனோகரா பள்ளியின் செயலாளர் தினேஷ்பால்,அறம் அரிமா சங்கம் ஜேசுராஜா, மற்றும் தலைவர் தினேஷ்பால் செயலாளர் மகேந்திரன் பொருளாளர் ஷாம்சுஜய் மற்றும் முன்னாள் மாணவர்கள், இந்நாள் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *