சேரன்மகாதேவி மின் பொறியாளர் மற்றும் பணியாளர்களுக்கு சார் ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கினார்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி மின் விநியோக பிரிவு தலைமை பொறியாளர்அவர்களின் உத்தரவின்படியும் மேற்பார்வை பொறியாளர் அவர்களின்

அறிவுறுத்தலின்படியும் கல்லிடைக்குறிச்சி கோட்டம் செயற்பொறியாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் சேரன்மகாதேவி பிரிவு உதவி மின்பொறியாளர் திரு கைலாசமூர்த்தி, பணியாளர்கள் திரு முருகேசன் சிறப்பு நிலை முகவர், திரு கிருஷ்ணன் முகவர் முதல் நிலை, திரு குமார் மின்பாதை ஆய்வாளர், திருமுருகன் மின்பாதை ஆய்வாளர், திரு திருமலை குமார் கம்பியாளர், திரு சுப்பிரமணியன் கம்பியாளர், திருமதி வள்ளி கம்பியாளர், திருமதி சரஸ்வதி கள உதவியாளர், திருமலுக்காமலி வணிக ஆய்வாளர், திரு சதீஷ்குமார், வணிக உதவியாளர், திரு முருகன் வருவாய் மேற்பார்வையாளர், திரு மணிகண்டன், மதிப்பீட்டு ஆய்வாளர், திரு சுயம்பு கணக்கிட்டாளர் அனைவரும் இரவு பகல் பாராமல் மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கருதி அயராத பணியாற்றிய மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மழை வெள்ளம் மற்றும் இயற்கை இடர்பாடுகளில் கடுமையாக உழைத்த K2 ஊழியர்களுக்கும் திரு சார் ஆட்சியர், அர்பித் ஜெயின், சேரன்மகாதேவி அவர்கள் நற்சான்றிதழ் மற்றும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.