சிவகங்கை :சிவகங்கை மாவட்டம் பூவந்தியின் அருகில் கடந்த 1998ஆம் ஆண்டில் ஆதி திராவிட
மக்களுக்கு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு 157 -குடும்பங்களுக்கு வீட்டுமனைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.ஆனால் வருவாய்த் துறையினர் இடத்தை அளந்து கொடுக்க வருடக் கணக்கில் காலம் தாழ்த்தியதால் இடத்தின் உரிமையாளர் உயர்நீதிமன்றம் சென்று 1.30 ஹெக்டேர் நிலத்தை மீட்டுக்கொண்டார் . இதனால் பயனாளிகளுக்கு 3 செண்டுவீதம் அளந்து கொடுக்க முடியவில்லை . பின்னர் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதானக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இரண்டரை செண்டு வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது.
இதன் பின்னரும் இடத்தை அளந்து கொடுக்காமல் ஒருவருடம் காலதாமதம் ஆனது .இந்நிலையில் தற்போது இருக்கும் இடத்தை அளந்து கொடுப்பது என்று ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் முடிவு செய்ததில் ஒரு வீட்டு மனைக்கு ஒன்றரை சென்ட்டு தான் வழங்க முடியும் எனக் கூறியதால் ஆதிதிராவிட மக்கள் திருப்தி அடையாமல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக் கொடுத்தனர் .
அந்த மனுவில் நாங்கள் வீட்டுமனைக்காக கடந்த 26 -வருடங்களாக காத்திருக்கிறோம்.ஏற்கனவே இருந்த 157 – பயனாளிகளில் இப்போது 27 – பயனாளிகள் இடம் பெயர்ந்து சென்று விட்டதால் தற்போது இருக்கும் 130 -பயனாளிகளுக்கு மட்டும் இரண்டரை சென்டு வீதம் வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனுக் கொடுத்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர்
உரிய நடவடிக்கை எடுப்பதாகஇப்போது கூறியுள்ளார்.
பூவந்தி அருகே 26 வருடங்களாக வீட்டு மனைக்கு காத்திருக்கும் ஆதி திராவிடர்கள்






