புதுடெல்லி, செப், 28 ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டு வருவது குறித்து, மந்திரிகள் குழுவினர் பங்கேற்ற ஆலோசனைகூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அந்தகூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மேற்கு வங்காள மாநில நிதி மந்திரி சந்திரிமா பட்டாச்சார்யா கூறியதாவது:சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து கலந்தாலோசிக்கப் பட்டது. உணவு பொருட்களுக்கு விதிக்கப்படும் 12 சதவீத ஜி.எஸ்.டி.வரியை 5 சதவீதமாக குறைப்பது,சைக்கிள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கான ஜி.எஸ்.டி.வரியை குறைப்பது குறித்து கூட்டத்தில்ஆலோசனை நடத்தப்பட்டது.வரிகுறைக்கப்படும் பட்சத்தில், ஜி.எஸ்.டி.வரி வருவாய் பாதிக்கப்படும். அதை ஈடுகட்ட சில பொரு ட்கள் மீதான வரியை உயர்த்துவது குறித்தும் இந்தகூட்டத்தில் ஆலோசித்தோம். குறிப்பாக, அழகு சாதனப்பொருட்கள். குளிர்பானங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை உயர்த்த ஆலோசிக்கப்பட்டது.மக்களின் வரிச்சுமையை குறைக்க 100 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டு வருவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். தற்போது மருத்துவ மற்றும் ஆயுள்கப்பீடு திட்டங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. ற வசூலிக்கப்படுகிறது. இதை குறைக்கவேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி சிலமாதங்கக்கு முன்பு மத் திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார்.இந்த நிலையில்,மருத்துவ மற்றும் ஆயுள் தொடர்பான ஜி.எஸ். காப்பீடுடி. வரியை குறைப்பது குறித்த முடிவு அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அடுத்த அக்டோபர் 19 ந்தேதி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இறுதி பரிந்துரைகள் உருவாக்கப்படும். அவை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அடுத்த கூட்டத்தில், தமிழ் நாடு, கேரளா, கர்நா டகா, ஆந்திரா,தெலுங்கானா,மேற்கு மேகாலயா, பஞ்சாப், வங்காளம், குஜராத், பீகார் கோவா, உத்தரபிரதேசம். ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 13 மந்திரிகள் பங்கு பெறுகிறார்கள்.
உணவு, மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைகிறது!






