சென்னை விமான நிலைய விரிவாக்கம்; அமைச்சர் டிஆர்பி ராஜா ஆலோசனை!

சென்னை: சென்னை விமான நிலை­யத்திலிருந்து ஏரா­ளமான பயணிகள் தினந்­தோ­றும் பய­ணம் செய்து வருகின்­ற­னர். உள்­நாடு மற்றும் வெளி­ நாட்டுப் பயணியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்­ணம் உள்­ளது. இந்த நிலை­யில், சென்னைவிமான நிலை­யத்தை விரிவாக்­கம் செய்­வது குறித்த ஆய்வுக்கூட்­டம் நடை­பெற்­றது. தமிழ்­நாடு தொழில்­ துறைஅமைச்­சர் டிஆர்பி ராஜா தலை­மை­யில் நடை­பெற்ற இந்­தக் கூட்­டத்தில், டிட்கோ(TIDCO)நிர்­வாக இயக்­குனர் ஸ்ரீசந்­தீப் நாந்தூரி மற்றும் விமனநிலைய அதிகா­ரிகள் (AAI) உள்­ளிட்ட பலர் பங்­கேற்­ற­னர். இதில் விமான நிலை­யத்தில் கூடு­த­லாக மேலும் ஒரு முனை­யம் அமைப்­பது குறித்தும், விமான நிலை­யத்தின் இரண்­டா­வது ஓடுபாதை நீளத்தைஅதிகரித்து, அதை முழு அளவில் பயன்­ப­டுத்துவது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­ டது. தொடர்ந்து, பயணி­கள் போக்­குவரத்து, சரக்­குகள் கையாள்­வது போன்­ற­வற்றை விரி­வாக்­கம் செய்­வது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­ டது. பின்­னர், அதிகமான சர்­வ­தேச விமா­னங்­கள் வந்து செல்லும் அள­வுக்கு தரத்தை மேலும் மேம்­ப­டுத்துவது குறிக்­கும் ஆலோ­சிக்­கப்­பட்­ டது. விமானநிலைதில் மேலும், சென்னை விமான நிலையத்தில் உள்ள இரண்­டா­வது ஓடுபாதை நீளம் அதிக­ரிக்­கப்­பட்டு, அந்த ஓடு பதையை முழு அளவில் பயன்ப­டுத்துவது குறித்தும் ஆலோ­சிக்­ கப்­பட்­டது. அதோடு, முக்­கியமாக விமான நிலைய வளா­கத்திற்குள் கூடு­த­லாக ஒரு முனை­யம் அமைக்­கப்­பட்டு, அந்த முனை­யத்தில் சரக்கு போக்­கு­ வரத்தை அதிக அளவில் கையா­ளுவது குறித்தும், அந்த முனை­யத்திலிருந்து என்­எச் 32 தேசிய நெடுஞ்­சா­லைக்கு இணைப்பு சாலை அமைப்­பது குறித்து கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­ டது. மேலும், சென்னை விமான நிலை­யம் வரும் வாகனங்­கள் மீனம்­பாக்­கம் ஜிஎஸ்டி சாலை­யில் வந்து போக்­குவரத்து நெரிசலில் சிக்­கிக் கொள்­ளா­மல், விமான நிலை­யத்தின் பின்­பக்­கம் வழியாக வந்து செல்­வது பற்றியும் ஆலோ­சனை நடத்­தப்­ பட்­டது. கூட்டநிறை­வில், விமான நிலை­யத்தின் விரிவாக்­கம் பணிக­ளுக்கு முத­ல­மைச்­சர் ஸ்டாலின் தலை­மை­யி­லான தமிழ்­நாடு அரசு முழு ஒத்து­ழைப்பு அளிக்­கும் என்று அமைச்­சர் டிஆர்பி ராஜா உறுதியளித்­தார்.