‘அமலாக்கத் துறை ஒடுக்குமுறைக்கு உச்ச நீதிமன்றமே விடியல்’ – செ.பா. ஜாமீன்; முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.

சென்னை: செந்­தில் பாலா­ஜிக்கு உச்சநீதி­ மன்­றம் ஜாமீன் வழங்கி­யதை வர­வேற்று தமிழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “அமலாக்­கத் துறை­யா­னது, அரசியல் எதிரி­களை ஒடுக்­கும் துறை­ யாக மாற்­றப்­பட்ட தற்­போ­தைய சூழலில், அதற்கு உச்சநீதி மன்­றம் ஒன்றே விடியலாக இருக்­கிறது.” எனக் குறிப்பிட்டுள்­ளார். இது தொடர்­பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆருயிர் சகோ­த­ரர் செந்­தில் பாலா­ஜிக்கு 471 நாட்­க­ளுக்­குப் பிறகு, உச்ச நீதிமன்­றத்­தால் பிணை கிடைத்திருக்­கிறது. அமலாக்­கத் துறை­யா­னது, அரசியல் எதிரி­களை ஒடுக்­கும் துறை­யாக மாற்­றப்­பட்ட தற்­போ­தைய சூழலில், அதற்கு உச்ச நீதி மன்­றம் ஒன்றே விடியலாக இருக்­கிறது. எமர்­ஜென்சி காலத்­தில் கூட இவ்­வ­ளவு நாட்­கள் சிறை வாழ்க்கை கிடை­யாது. அரசியல் சதிச் செயல்­கள் 15 மாதங்­கள் தொடர்ந்­தன. கைது செய்து சிறை­யி­லேயே வைத்து விடுவ­தால் சகோ­த­ரர் செந்­தில் பாலா­ஜியின் உறுதி­யைக் குலைக்க நினைத்­தார்­கள்.முன்­னிலும் உரம் பெற்­ற­வராய்ச் சிறை­யில் இருந்து வெளியில் வரும் சகோ­த­ரர் செந்­தில் பாலா­ஜியை வருக வருக என வர­வேற்கி­றேன். உன் தியா­கம் பெரிது! உறுதி அத­னினும் பெரிது!” எனக் குறிப்பிட்டுள்­ளார். முன்­ன­தாக (செப்.26) காலை உச்ச நீதிமன்­றம் செந்­தில் பாலா­ஜிக்கு ஜாமீன் வழங்கி உத்­த­ர­ விட்­டது.