லட்டு சர்ச்சை: திருப்பதி கோயில் சாந்தி ஹோமத்தால் அனைத்தும் தூய்மை ஆகிவிட்டதாக அர்ச்சகர் தகவல்!

திருப்­பதி: திருமலை பெருமாள் கோயிலில் சாந்தி ஹோமம் செய்­யப்­ பட்டுவிட்­ட­தால் அனைத்­தும்             தூய்­மை­யாகி விட்­ட­தாக கோயிலின் தலைமை அர்ச்­ச­கர் வேணு­ கோ­பல் தீட்சிதர் தெரிவித்துள்­ளார். ஆந்திரப் பிர­தேச முன்­னாள் முதல்­வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்­பதி லட்டு தயாரிக்­கப் பயன் ­ப­டுத்­தப்­பட்ட நெய்­யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்­த­தாக அம்­மா­நிலமுதல்­வர் சந்­திர­பாபு நாயுடு கடந்த 18-ம் தேதி தெரிவித்­தார். இதை­யடுத்து இந்த விவகாரம் சர்­வ­தேச அளவில் மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியது. இதை­யடுத்து, கடந்த 20-ம் தேதி செய்தி­யாளர்­க­ளி­டம் பேசிய திருப்­பதி பெருமாள் கோயிலை நிர்­வ­கிக்­கும் திருமலை திருப்­பதி தேவஸ்­தான செயல் அலு­லர் ஷியமலா ராவ், “ தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்­றிக்­கொ­ழுப்பு இருப்­பது ஆய்­வக சோதனைகளில் தெரிய வந்துள்­ளது. இது தொடர்­பான நான்கு அறிக்­கை­களும் ஒரே மாதிரி­யான முடிவுக­ளைத்தந்­தன. எனவே நாங்­கள் உட­ன­டியாக விநி­யோ­த்தை நிறுத்தி­னோம். மேலும் ஒப்­பந்­தக்­கா­ரரை பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்­ ளோம்.  அப­ராதம் விதிக்­கும் நடை­மு­றை­யும் தொடங்­கப்­ப­டும். அதோடு, ​​சட்­டப்­ படி­யும் நட­வடிக்கை எடுக்­ ப்­ப­டும்” எத்தெரிவித்­தார். இதனையடுத்து கடந்த 20ம் தேதி செய்தியாளர்­க­ளி­டம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “திருப்­பதி பெருமாள் கோயில் லட்டு தயாரிக்­கப்­பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்­த­தாக வெளியாகி உள்ள அறிக்கை தவறா­னது. முதல்­வர் சந்திர­பாபு நாயுடு, மக்­க­ளின் நம்பிக்­கையை அரசியலுக்­கா­கப் பயன்­ப­டுத்துகிறார்” என மறுப்பு தெரிவித்திருந்­தார். பல்­வேறு பக்­தர்­கள் விர­தம் இருந்து திருப்­பதி கோயிலுக்­குச் சென்று பெருமாளை தரிசிப்­பது வழக்­கம். அசைவ உணவு உண்­ப­ர்­க­ளும் விரத நாட்­க­ளில் அசை­வத்தை தவிர்ப்­பார்­கள். இந்த பின்­ன­ணியில், திருப்­பதி பெரு­மாள் கோயில் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்தி­ருந்­ததை திருப்­பதி தேவஸ்­ தா­னமே ஒப்புக்­கொண்­ட­ தால், இதற்கு பிராயச்சித்­தம் செய்ய வேண்­டும் என்ற கோரிக்கை பரவலாக எழந்­தது. இதை கருத்தில் கொண்டு(திங்­கள்கிழமை) காலை திருப்­பதி பெருமாள் கோயிலில் சாந்தி ஹோமம் செய்­யப்­பட்­டது. ஹோமத்தில் வைக்­கப்­ பட்ட பஞ்­ச­கவ்­யம், கோயில் வளாகம், லட்டு தயாரிக்­கும் சமை­யலறை, விநி­யோ­கிக்­கும் இடங்­கள், மலை­யில் உள்ள பிற கோயில்­கள் ஆகியவற்றில் தெளிக்கப்­பட்டு தூய்­மைப்­ப­டுத்­தப்­பட்­டது. இது குறித்து செய்தியாளர்­க­ளி­டம் பேசிய திருப்­பதி பெருமாள் கோயிலின் தலைமை அர்ச்­ச­கர் வேணு­கோ­பல் தீட்சிதர், “திருப்­பதி பெரு­ மாள் கோயிலில் லட்டு தயாரிக்­கப்பயன் ­ப­டுத்­தப்­பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்­கப்­பட்­டது தொடர்­பான செய்தி கடந்த 4-5 நாட்­க­ளாக உலகம் முழுவதும் பரவி உள்­ளது. ஆய்­வக அறிக்­கை­யில் இது உறுதிப்­ப­டுத்­தப்­பட்­டது. இதை­யடுத்து இதற்கு தீர்வு காண ஆந்திரப் பிர­ தேச அரசும், திருமலை திருப்­பதி தேவஸ்­தா­ன­மும் எங்­களை அணுகின. ஆகம ஆலோ­ச­கர்­கள் மற்றும் தலைமை அர்ச்­ச­கர்­க­ளு­ட­னான ஆலோ­ச­னையை அடுத்து, இது ­போன்ற ஒரு சூழ்­நி­லை­யில் மேற்­கொள்ள வேண்­டிய பொருத்­த­மான சாந்தி ஹோமத்தை நடத்­ துமாறு நாங்­கள் நேற்று (செப். 22) பரிந்து­ரைத்­தோம். இந்த ஹோமத்தை நடத்தி­னால் அனைத்தும் மீண்­டும் தூய்மை டை­யும் என்­பதை கூறி­ னோம்.