தருமபுரி, செப்.22 தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா உத்தரவின் பேரில் அரூர் ஒன்றியஉணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி தலைமையில் சரண்குமார்,திருப்பதி, அருண் கொண்ட குழுவினர் ஆய்வுப்பணியில் மேற்கொண்டனர்.அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலைய பகுதி,,தருமபுரி ரோடு, மற்றும் முக்கியப்பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகள்,உ ணவகங்கள் பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில் மூன்று கடைகளில் விற்பனைக்காக கெட்டுப்போன மாட்டிறைச்சி 50 கிலோ வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.தொடர்ந்து பேக்கரிகளில் நடத்திய ஆய்வில் 10 கிலோநிறம் ஏற்றிய இனிப்பு மற்றும் கார வகைகள் கண்டறியப்பட்டு 10 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.ஹோட்டல்களில் தரமற்ற உணவு வைத்திருந்ததாக கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இச்செயல்களில் ஈடுபட்ட 10 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது தொடர்ந்து ஆய்வின் போது உணவு சார்ந்த தொழில் செய்யும் அனைவரும் கண்டிப்பாகஉணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வலியுறுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பாெருட்கள் விற்பனை செய்வதோ பதுக்குவதோ சட்டப்படி குற்றம் எனவும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
அரூர் பேரூராட்சியில் உணவுபாதுகாப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கெட்டுக்போன இறைச்சி மற்றும் தரமற்றப்பொருட்கள் பறிமுதல் 10 கடைக்காரர்களுக்கு தலா ரூ ஆயிரம் அபராதம் விதித்தனர்






