அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ADMK சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ADMK சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான K. பாண்டியன் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக அமுதா அருணாச்சலம் அண்ணா திமுக மகளிர் அணி துணைச் செயலாளர் சிறப்புரை ஆற்றினார் இவர் பேசுகையில் தமிழ்நாட்டில் அதிக அளவு கஞ்சா போதை பொருள்கள் விற்பனையாகிறதாகவும் தினசரி டிவி மட்டும் பேப்பரை திறந்தால் கொலை கொள்ளை என்ற செய்தி தான் வருகிறது உருப்படியான எந்த செய்தியும் வரவில்லை என்றும் விரைவில் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி அரசு தலைமையில் அண்ணா திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் பேசுகையில் டாஸ்மார்க் கடைகள் யாரிடம் உள்ளது டாஸ்மார்க் பேக்டரியே திமுக மந்திரிகள் கையில் தான் உள்ளது ஏதோ பூச்சாண்டி காட்டுவதற்காக கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு மதுவிலங்கை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இது பொதுக்கூட்டில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது