நெல்லை, செப்.19- நெல்லை அருகே உள்ள மானூரில் அரசு உதவிபெறும் இடைநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தபள்ளியில் ஹென்றி செல்வன் ராஜ்குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்தபள்ளிக்கு புதிதாக வந்த 11 வயது மாணவியிடம் வகுப்பறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக பள்ளிநிர்வாகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் அவர்பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.இதில் ஆசிரியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஹென்றிசெல்வன் ராஜ்குமாரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவிட்டார்.இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளிக்க விரும்பாத நிலையில் நேற்று பாளை தாலுகா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் ஹென்றி செல்வன் ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ்வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே மானூரில் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தலைமறைவான ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு!






