நெல்லை அருகே மானூரில் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தலை­ம­றை­வான ஆசி­ரி­யர் மீது போக்­சோ­வில் வழக்கு!

நெல்லை, செப்.19- நெல்லை அருகே உள்ள மானூரில் அரசு உதவிபெறும் இடை­நி­லைப்­பள்ளி ஒன்று உள்­ளது. இந்தபள்ளியில் ஹென்றி செல்­வன் ராஜ்குமார் என்­ப­வர் ஆசிரிய­ராக பணியாற்றிவருகி­றார்.இவர் கடந்த ஒரு வாரத்­திற்கு முன்பு அந்தபள்ளிக்கு புதி­தாக வந்த 11 வயது மாண­வியிடம் வகுப்­ப­றையில் பாலியல் சீண்­ட­லில் ஈடு­பட்­ட­தாக புகார் செய்­யப்­பட்­டது. இது­ தொ­டர்­பாக பள்ளிநிர்­வா­கம் சார்­பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாரிடம் புகார் தெரி­வித்­த­னர். இத­னால் அவர்பள்ளிக்கு நேர­டியாக சென்று விசா­ரணை நடத்தி­னார்.இதில் ஆசிரியர் மாணவியிடம் பாலியல் சீண்­டலில் ஈடு­பட்­டது தெரிய வந்­தது. இதை­யடுத்து நேற்று முன்­தினம் சம்­பந்தப்­பட்ட ஆசிரியர் ஹென்றிசெல்­வன் ராஜ்குமாரை தற்­காலிகமாக பணியிடை நீக்­கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்­த­ர­விட்­டார்.இத­னி­டையே பாதிக்­கப்­பட்ட மாண­வியின் பெற்­றோர் புகார் அளிக்க விரும்­பாத நிலை­யில் நேற்று பாளை தாலுகா அனைத்து மகளிர் காவல் நிலை­யத்தில் புகார் அளித்­த­னர்.புகாரின் பேரில் போலீ­சார் ஆசிரியர் ஹென்றி செல்­வன் ராஜ்குமார் மீது போக்சோ சட்­டத்தின்­ கீழ்வழக்குப்­ப­திந்து அவரை தேடி வருகின்­றனர்.