தமி­ழ­கம் முழு­வ­தும் குரூப்- 2 தேர்வு- 7.93 லட்­சம் பேர் இன்று எழு­து­கி­றார்­கள்!

சென்னை,செப்.14- தமிழ­நாடு முழுவதும் இன்று(சனிக்கிழமை) குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது.துணை வணிகவரிஅதிகாரி, தொழிலா­ளர் நலத்துறை உதவி ஆய்வா­ளர், இளநிலைவேலை வாய்ப்பு அலுவலர், சார்-­ப­திவா­ளர் உள்ளிட்டபதவியி­டங்கள் குரூப் 2 பிரிவில் வருகின்­றன.இதே­ போன்று, உதவியா­ளர்­கள் உள்­பட அமைச்சுப் பணியில் காலியாக உள்ள இடங்கள் குரூப் 2ஏ பிரிவில் உள்­ளன. 2 பிரிவுகளிலும் சேர்த்து மொத்­த­மாக 2,327 காலிப் பணியி­டங்­களுக்­கான எழுத்துத்தேர்வு அறிவிக்­கையை அரசுப்பணியா­ளர் தேர்­வா­ணமையம் வெளியிட்­டது. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வை 7 லட்­சத்து 93 ஆயிரத்து 966 பேர் நாளை (சனிக்கிழமை) எழுத உள்ளனர். இதற்காக தமிழ்­நாடு முழுவதும் 2,763 மையங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்ளன. தேர்வுக்­காக அனைத்து மாவட்­டங்களிலும் மாவட்டக லெக்­டர்­கள் தலைமை ஒருங்கிணைப்­பா­ளரா­கவும்,மாவட்ட வருவாய் அலுவலர்­கள், இணைஒருங்கி­ணைப்­பா­ளராகவும் செயல்­ப­டுவர்.தேர்வை கண்­காணிக்க, துணை கலெக்டர் நிலை­யில் பறக்கும்படைகள் அமைக்­கப்பட்­டுள்­ளன. ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்­சியர் அலுவலகம் மூலம் நியமிக்­கப்பட்­டுள்­ளார்.மொத்­த ­முள்ள 2,763 தேர்வு மையங்­க­ளுக்கு முதன்மை கண்­காணிப்­பா­ளர்­கள், கண்கா­ணிப்­பா­ளர்­கள் நியமிக்­கப்­பட்­டுள்­ள­னர்.தேர்வு நடைபெறுவதற்­கான அனைத்து முன்­னேற்­பா­டுகளும் செய்­யப்­பட்­டுள்­ளன.தேர்வு நடைபெறும் நாளன்று அனைத்து நட­வடிக்­கை­களும் வீடியோ பதிவு செய்யப்­ப­டும்.தேர்­வர்­கள் தங்­க­ளுக்கு ஒதுக்­கப்பட்ட மையங்­க­ளுக்குள் நாளை காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்­டும். 9மணி வரை அவர்­கள்வருவதற்கு அனு­மதி உண்டு. அதற்குப்பிறகு தேர்வு மையத்தில் நுழைய அனுமதியில்லை. தேர்வுக்கூட அனு­மதிச் சீட்டை கட்­டா­யம் எடுத்துச் செல்லவேண்டும். தடை செய்­யப்பட்ட மின்­னணு சாதனங்­கள் உள்­பட வேறு எந்­த­வகை சாதனங்­களை­யும் எடுத்துச் செல்லக்கூ­டாது என அறிவுறுத்­தப்­பட்­டுள்­ளது.