சென்னை,செப்.14- தமிழநாடு முழுவதும் இன்று(சனிக்கிழமை) குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது.துணை வணிகவரிஅதிகாரி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், இளநிலைவேலை வாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர் உள்ளிட்டபதவியிடங்கள் குரூப் 2 பிரிவில் வருகின்றன.இதே போன்று, உதவியாளர்கள் உள்பட அமைச்சுப் பணியில் காலியாக உள்ள இடங்கள் குரூப் 2ஏ பிரிவில் உள்ளன. 2 பிரிவுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,327 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு அறிவிக்கையை அரசுப்பணியாளர் தேர்வாணமையம் வெளியிட்டது. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் நாளை (சனிக்கிழமை) எழுத உள்ளனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக லெக்டர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்,மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணைஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவர்.தேர்வை கண்காணிக்க, துணை கலெக்டர் நிலையில் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.மொத்த முள்ள 2,763 தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.தேர்வு நடைபெறும் நாளன்று அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குள் நாளை காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். 9மணி வரை அவர்கள்வருவதற்கு அனுமதி உண்டு. அதற்குப்பிறகு தேர்வு மையத்தில் நுழைய அனுமதியில்லை. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை கட்டாயம் எடுத்துச் செல்லவேண்டும். தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் உள்பட வேறு எந்தவகை சாதனங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் குரூப்- 2 தேர்வு- 7.93 லட்சம் பேர் இன்று எழுதுகிறார்கள்!






