கனமழை: நீலகிரியில் 6 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை- மண் சரிவால் வாகனங்கள் நிறுத்தம்!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 24-ந் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மலைப்பகுதிகளில் பயணம் மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மண்சரிவு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம்- உதகை மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்க்கிறது. மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில், இன்று (அக்டோபர் 24-ந் தேதி) மேட்டுப்பாளையம்- உதகை மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.