சென்னை: முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழு பிரிவில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது திறமையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‘ELITE Sportsperson Scheme’ திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் ஹரிஹரனின் இந்த சாதனை, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும். ஹரிஹரன் மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






