அண்ணா சிலைக்கு திமுகவினர் மலர்மாலை அணிவித்து மரியாதை – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்
வீரவநல்லூர், செப். 15:
வீரவநல்லூரில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வீரவநல்லூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூர் கழகச் செயலாளர் வி. சுப்பையா தலைமை வகித்தார். பேரூர் கழக அவைத் தலைவர் பழனி, பொருளாளர் முத்துக்குமார், துணைச் செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி சுப்புக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கழக மூத்த முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகள் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணாவின் கொள்கைகள், சமூகநீதி, சமத்துவம், தமிழ் மொழி வளர்ச்சி

மற்றும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றப்பட்டது.
மேலும், பேரறிஞர் அண்ணாவின் அரசியல் மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து, அவரது கொள்கைகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. விழாவின் நிறைவாக, கலந்து கொண்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் அப்துல் ரகுமான், சந்தானம், சண்முகவேல், அனந்தராமன், முன்னாள் கவுன்சிலர் ஜே. ராஜன், வார்டு செயலாளர்கள் வெள்ளப்பாண்டி, திருமுகராஜ், ஜான் மத்தியஸ், செல்லத்துரை, அய்யம்பெருமாள், பாலசுப்பிரமணியன், ஒன்றிய பிரதிநிதி முத்தையா, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






