சேரன்மகாதேவி செப்டம்பர் 11: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த பட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் வினோத் கண்ணன் (25) டிபிஏ பட்டதாரியான இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தார்.
இவருக்கும் கங்கனாகுளம் பகுதியை சேர்ந்த எஸ்தர் (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர் இந்த நிலையில் கடந்த 22 தினங்களுக்கு முன்னர் இத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது இதனை அடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நேற்று பைக்கில் தனியாக திருச்செந்தூர் சென்ற வினோத் கண்ணன் கோயிலில் மொட்டை போட்டு வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
தொடர்ந்து மாலை 3:30 மணி அளவில் அவர் பைக்கில் ஊர் திரும்பியபோது வி எம் சத்திரம் அருகே முன்னாள் சென்ற வாகனத்தை முந்தும்போது எதிர்பார விதமாக எதிரே வந்த மொபட்டில் மோதி உள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த வினோத் கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். குழந்தை பிறந்த 22 நாட்களிலே நேர்த்திக்கடன் செலுத்தி வந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததது கங்கனாங் குளம், பட்டங்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






