மதுரை அருகே பரபரப்பு பள்ளி மாணவர் ஆணவப்படுகொலை? முட்புதரில் சடலமாக மீட்பு

 

மதுரை, செப். 8:

மதுரை, கூடல்நகர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் யோகலெட்சுமி கருப்பசாமி தம்பதியினர். இவர்களது மகன் தமிழ்செல்வன்(16). அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் (ஞாயிறு) விடுமுறை நாள் என்பதால், காலையில் கிரிக்கெட் விளையாட செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு தமிழ்செல்வன் வீட்டிலிருந்து வெளியில் சென் றுள்ளார். ஆனால், மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அவரது தாயார் யோகலெட்சுமி மற்றும் உறவி னர்கள் பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனாலும் தமிழ்செல்வனை கண்டுபி டிக்க முடியவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த யோகலெட் சுமி கூடல் புதூர் காவல்நிலையத்தில் மகனைக் காண வில்லை என்று புகாரளித்தார்.

இந்நிலையில் மதுரை ஆனை யூர் கழிவுநீரேற்று நிலையத்தை ஒட்டிய அப்துல்கலாம் தெரு பகு தியில் உள்ள முட்புதர் அருகே காயங்களுடன் ஒரு சிறுவனின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு தமிழ்செல்வன் உடலில்

பல்வேறு இடங்க ளில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவர் மர்மமான முறையில் காயங்களுன் இறந்து கிடந்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. இதன்பேரில் கூடல்புதூர் போலீசார் விசாரணையை வேகப்படுத்தியுள்ளனர்.

போலீசார் தரப்பில் கூறும் போது, “மாணவர் தமிழ்செல்வன் கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட தகவலின்பேரில் மாணவர் தனது வீட்டருகே உள்ள வேறோரு சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் நட்புரீதியாக பேசிவந்த தாக தெரிகிறது. இது தொடர் பாகமாணவியின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் செல்வனிடம், “மாணவியிடம் தொடர்ந்து பேசினால் பின்

விளைவுகளைச் சந்திப்பாய்” எனக்கூறி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது மாணவரிடம் உன் வீடு எங்குள்ளது என்று மாணவியின் தந்தை கேட்டதற்கு, தனது வீடு இருக்கும் பட்டியலின சமூகத் தினரின் பகுதியை சொல்லி விட்டு மாணவர் அங்கிருந்து சென்றதும் தெரிய வந்துள்ளது. இந்த சூழலில் முட்புதரில் மாணவர் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருப்பதால், ஆணவப்படுகொலை செய்யப் பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆட்கள் நடமாட் டமே இல்லாத முட்புதருக்குள், மாணவர் உடல் கழிவுநீர் ஓடிய பகுதியிலிருந்து சடலமாக மீட் கப்பட்டிருக்கிறது. ஆணவப்படு கொலையா என்ற சந்தேகத் தின் பேரிலும் விசாரணையை வேகப்படுத்தியுள்ளோம். தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியின் கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்படுகிறது. விசாரணை முடிவில் கொலைக்கான காரணம் தெரிய வரும்” என்றனர்.