காரைக்குடி: காரைக்குடியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், அளித்த பேட்டி:
சட்டமன்றம் ஒரு விளையாட்டு களமாக உள்ளது. எதிர்க்கட்சி கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கூறுவது இல்லை. லஞ்ச வழக்கில் விஜயபாஸ்கர், வேலுமணி போன்றவர்களை இதுவரை கைது செய்யவில்லை. ஊழலை ஒழிப்போம், நேர்மையாக இருப்போம் என கூறினார்கள். ஆனால் ஊழல்வாதிகளான இரண்டு விஜயபாஸ்கர்களை கட்சியில் சேர்த்துள்ளார்கள். ஊழல்வாதிகள் மீது முதல்வர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 6 பேரை தவெகவில் சேர்த்தார்கள். இசக்கி சுப்பையா அங்கு மரியாதை இல்லை என்றவுடன் எம்எல்ஏ பதவி வேண்டும் என கேட்கிறார். இது எவ்வளவு பெரிய அசிங்கம். சட்டமன்ற கூட்டம் வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு கூறினார்.






