திருநெல்வேலியில் தலையை அறுத்து ஒருவர் கொலை: பதற்றம்

திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த பாஸ்கர் (42) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே  தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மாலை சுமார் 4 மணியளவில் பாஸ்கர் சேந்தமங்கலத்தில் இருந்து மணிமூர்த்தீஸ்வரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சிலர் வழிமறித்ததாகவும், மோட்டார் சைக்கிளை மிதித்து கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, பாஸ்கரை தாக்கிய மர்ம நபர்கள், அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, சம்பவ இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் சாலையில் உடலை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனிடையே, கடந்த வாரம் பாஸ்கருக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து பாஸ்கர் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மணிகண்டன் மற்றும் பொன்ராஜ் ஆகிய இருவர் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தால் மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.