சேரன்மகாதேவியில் மலை போல் குவிந்துள்ள குப்பை கழிவுகள்அலட்சியம் காட்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள்

‎குடிநீ நோய் பரவும் அபாயம்ர் மூலம் தொற்று

‎கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்வாரா?

‎வீரவநல்லூர், ஆக.22: சேரன்மகாதேவியில் சுகா தாரத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அருகே மலை போல் குவிந்துள்ள குப்பை கழிவுகள் சாலை யில் சிதறி கிடக்கிறது. இத னால் நோய் பரவும் அபா யம் உள்ளதால் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண் டுமென பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

சேரன்மகாதேவி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் ரவுண்டானா அருகேயுள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்து செல் லப்பட்டு, அங்கு குப்பை கள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படும். ஏனைய குப்பை கழிவுகள் மலையடிவாரப்பகுதியில் கொட்டப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டு வந்தது.

‎இந்நிலையில் வாரப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அப் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு வனத்துறை தடை விதித்தது. இதனையடுத்து குப்பைக் கழிவுகளை இடுவதற்கு போதிய இடம் இல்லாத காரணத்தால் குப்பை கிடங்கில் தற்போது மலை போல் குப்பைகள் தேங்கியுள்ளது. இந்த குப்பை கிடங்கை ஒட்டியே மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியும் உள்ள தால் குடிநீர் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பை கிடங்கிற்கு மிக அருகில் நூற்றுக்கணக்கான குடி யிருப்பு வீடுகளும் உள்ள நிலையில் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளமல் உள்ளனர் இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10-ல் தமிழன் உதயம் இதழின் வாயிலாக மேல்நிலை நீர்த்துக்கு தொட்டி அருகில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை குறித்து விரிவாக செய்தியும் வெளியிட்ட பட்டிருந்தது பத்திரிகை செய்தி மூலம் சுட்டிக்காட்டியும் 10 நாட்களுக்கு மேலாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை சரியா செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

‎ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் கடையநல் லூர் பகுதியில் கொட்டப் பட்டுள்ள குப்பைகளால் நோய் பரவி வருகிறது. அப்பகுதியில் மர்ம காய்ச்ச லால் பேர் பலியாகியுள்ள நிலையில் மாவட்ட கலெக்டர் நேரடி ஆய்வு மேற்கொண்டு நகராட்சி உரக்கிடங்குகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

எனவே நெல்லை மாவட்ட கலெக்டரும் சேரன்மகா தேவி பேரூ ராட்சியில் நேரடி ஆய்வு மேற்கொண்டு மெத்தனத் துடன் செயல்படும் சுகா தாரத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நீர்தேக்க தொட்டி அருகில கொட் டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.

இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஈஸ்டர்ராஜ் கூறுகையில், ‘குடியிருப்பு வீடு கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அருகே மலைபோல் குவித்து வைக்கப் பட்டுள்ள குப்பை கழிவுகளால் வீட்டில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மழை பெய்யும் ஈஸ்டர்ராஜ் முன்னரே இதனை உடனடியாக அப்புறப்ப டுத்தாவிட்டால் நோய் தொற்று ஏற்படுவது உறுதியாகிவிடும். சப்கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட பல்வேறு உயரதிகாரிகள் தினமும் இப்பகுதியை கடந்து செல்லும் சூழலில் யாருமே இதனை கண்டுகொள்ளாதது வேதனை அளிக்கிறது. மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அருகேயுள்ள இந்த குப்பை கிடங்கை நிரந்தரமாக இடம் மாற்றம் செய்யாவிட்டால் வருகின்ற உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தலை புறக்கணிக்க இப்பகுதி மக்களாகிய நாங்கள் தயாராக உள்ளோம்’ என்றார்.

‎