திருச்சி கிழக்கில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச இ-சேவை மையம் திறப்பு
திருச்சி, ஆகஸ்ட் 13: கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படியும், கழக பொதுச்செயலாளரும் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் ஆலோசனையின்படியும், திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் தர்கா சௌகத் தலைமையில், கழக நிர்வாகி நாகநாதர் மகேந்திரன் ஏற்பாட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச இ-சேவை மையம் திறக்கப்பட்டது.
சிந்தாமணி பகுதிக்குட்பட்ட 12-வது வட்டம், தாஜ் திருமண மஹால் பின்புறம், ராமமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இலவச இ-சேவை மையம் பொதுமக்களின் பல்வேறு அரசு சார்ந்த சேவைகள் மற்றும் தேவைகளை எளிதாகப் பெறுவதற்கு உதவும் வகையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, சிந்தாமணி முத்துக்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் செந்தில் நாதன், ஜெரால்ட் மில்டன், காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் வரகனேரி கௌதமன், பாலக்கரை பகுதி செயலாளர் சூர்யா, ஏர்போர்ட் பகுதி வெள்ளைச்சாமி, மலைக்கோட்டை பகுதி செயலாளர் சதீஷ்குமார், பாலக்கரை கிழக்கு பகுதி செயலாளர் சிவா, காந்தி மார்க்கெட் கிழக்கு பகுதி செயலாளர் டர்க்கிஷ், மலைக்கோட்டை கிழக்கு பகுதி செயலாளர் கணேஷ்குமார், சிந்தாமணி பகுதி செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட, பகுதி, வட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், பூத் நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் கழக தோழிகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இலவச இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.






