தாமிரபரணி படுகொலை நினைவு நாள்: மாஞ்சோலை தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய விடுதலைத் தமிழ் புலிகள் கட்சி மற்றும் தமிழர் ஆட்சிக் கழகம்

தாமிரபரணி படுகொலை நினைவு நாள்: மாஞ்சோலை தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய விடுதலைத் தமிழ் புலிகள் கட்சி மற்றும் தமிழர் ஆட்சிக் கழகத்தின் சார்பில் மலர் தூவி மௌன அஞ்சலி .

 

நெல்லை, ஜூலை 23:
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழந்த தாமிரபரணி படுகொலையின் 25-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் விடுதலைத் தமிழ் புலிகள் கட்சி மற்றும் தமிழர் ஆட்சிக் கழகத்தின் சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

இந்த நிகழ்ச்சியில் விடுதலைத் தமிழ் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் மற்றும் , தமிழர் ஆட்சி கழகம் நிறுவனத் தலைவர் S.R. பாண்டியன் உடன் விருதுநகர் மாவட்ட செயலாளர் கபில் ராஜ்குமார், தென்காசி மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், விருதுநகர் மாவட்ட செயலாளர் கருப்பசாமி புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் A.K. நெல்சன், விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் சுடலை,
விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கலை சசிக்குமார், நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் ராஜு, மாவட்ட மகளிர் அணி தலைவர் மா. ஸ்டார் பெல் விமலா, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் ச. கண்மணி, மானூர் ஒன்றிய செயலாளர் எம். பொன்ராஜ்,சமூக சமத்துவ முற்போர்க்கு மாணவ பேரவை மாநில செயலாளர் ரியாஸ்  துணைப் பொதுச் செயலாளர் மா குணசேகரன் கடலூர் மாநில அமைப்பு செயலாளர் தளபதி சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிரிழந்த 17 தொழிலாளர்களின் நினைவாக மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியின் முடிவில், மாஞ்சோலை போன்ற துயரச் சம்பவங்கள் இனி எங்கும் நிகழாத வகையில் தொழிலாளர் பாதுகாப்பு, நியாயமான ஊதியம் மற்றும் மனிதநேயமான பணிச்சூழலை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மாஞ்சோலை தியாகிகளுக்கு அரசு மணிமண்டபம் அவர்கள் புதைக்கப்பட்ட அபிஷேகப் பட்டி இடத்தில் அமைத்து தர வேண்டும் மற்றும் ஆண்டுதோறும் அரசு சார்பில் நினைவுநாள் அனுசரிக்க வேண்டும் என பேட்டியில் போது தெரிவித்தார்.