இராமநாதபுரம், செப், 8 இரமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள சுவாமிகள் மடத்து தெரு, வடக்கூர் நடுத்தெரு, அலியார்தெரு, மொச்சிகுலத்தார் தெரு, வீரகாளியம்மன் கோவில் தெரு, முகமதியார் வடக்கு தெரு, மறவர் தெரு, வக்கீல் ராமலிங்கம் பிள்ளை தெரு, பெரிய பள்ளிவாசல் தெரு, அய்யனார் கோவில் தெரு,நாடார் தெரு, ஆகிய தெருக்களிலும் குறிப்பாக பேருந்து நிலையத்தை ஒட்டியபஜார் தெருவில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதற்கு முக்கிய காரணம் வேர ஊர்களில் இருந்து பிடிக்கப்பட்டn நாய்களை முதுகுளத்தூர்பேரூராட்சி பகுதியில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் வீட்டின் அருகே கட்டி இருக்கும் கால்நடைகளையும் தெருவில் சுற்றி தெரியும் வெறி நாய்கள் கடித்து விடும் என்ற அச்சத்தில் உள்ளனர். இதனால் பொது மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கும் சூழ்நிலை ஏற்பபட்டுள்ளது.ஆகையால் தெருவில் உள்ள பொது மக்களிடம் விசாரித்து எந்த பகுதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது என கண்டறிந்து பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த தெருக்களில் சுற்றும் வெறி நாய்களைபிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக வெளியூர்களில் பிடிக்கப்பட்ட நாய்களை முதுகுளத்தூர்நகர் பகுதியில் விடக்கூடாது என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
முதுகுளத்தூரில் வெறி நாய் தொல்லை அச்சத்தில் பொது மக்கள்!






