அம்பாசமுத்திரம் கிழக்கு ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது
வீரவநல்லூர், ஜூலை 19:
அம்பாசமுத்திரம் கிழக்கு ரோட்டரி கிளப்பின் 2026–27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வீரவநல்லூர் ரோட்டரி ஹாலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவில், Rtn. நவமணி உதவி ஆளுநராகவும், Rtn. முரளிதரன் தலைவராகவும், Rtn. குமார் சுந்தரம் செயலாளராகவும், Rtn. சுரேஷ் பொருளாளராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர்கள் Rtn. PDG. டாக்டர் சண்முகம் மற்றும் Rtn. PDG. ஜெசிந்தா சர்மா ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினர்.
மேலும், சமூகப் பணியின் ஒரு பகுதியாக சுமார் 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், 4 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை முன்னாள் உதவி ஆளுநர் Rtn. PAG. சி. இசக்கிசவணன் தொகுத்து வழங்கினார். இதில் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அம்பாசமுத்திரம் கிழக்கு ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது






