வீரவநல்லூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா: திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

வீரவநல்லூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா: திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

வீரவநல்லூர், ஜூலை 15:
வீரவநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் நகர காங்கிரஸ் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளரும், கவுன்சிலருமான சிதம்பரம் முன்னிலை வகித்து, பெருந்தலைவர் காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவை, கல்வி வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் மற்றும் அரசியல் நேர்மை குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் திருநாவுக்கரசு, ஐ.என்.டி.யு.சி. செயலாளர் ரவி, துணைத் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஜெரால்ட், துணைச் செயலாளர் பிச்சக்கண்ணு, சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஜெபக்குமார், வார்டு நிர்வாகிகள் ரமேஷ், முத்து, வரதராஜன், சண்முகவேல், செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்று, காமராஜரின் கொள்கைகளையும் மக்கள் நலப் பணிகளையும் பின்பற்றி செயல்பட உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. :::