தங்களது ஊர் பெயரை மாற்றியதை கண்டித்து மணப்பாறை அருகே மக்கள் சாலை மறியல்

திருச்சி: மணப்பாறை அடுத்த எப்.கீழையூர் கிராம மக்கள் தங்களது ஊர் பெயரை மாற்றியதை கண்டித்து மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீஸார் சமரசத்தை ஏற்காத மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.